25 நவ., 2024

உலக திரை...

Zindagi 👈🏾உறுப்பு தானம் குறித்த இந்தி படம். ஒளிப்பதிவு, இயக்கம் சிறப்பு. 

பாலஸ்தீனம் நடப்பு ஆவணத் திரை... 👈🏾பாலஸ்தீனம் போர் அவலம் 

sorry cinema 👈🏾குறும்படம் 

புதுக்கோட்டை வீதி கலை இலக்கிய களத்தின் 125 நிகழ்வை ஒட்டி சிறப்பு திரையிடல், புதுக்கோட்டை பிலிம் சொசைட்டி நிறுவனர் கவிஞர் இளங்கோ அவர்களின் தேர்வும் திரையிலும் . 'ரீல்ஸ்' எனும் குறும் வீடியோக்களுக்கு பழக்கப்பட்ட நாம், முழு நீள படங்களை பார்த்து ரசித்து இயக்குனரின் படைப்பாற்றலை முழுமையாக புரிந்து கொள்வது இன்றைய தேவையாக உள்ளது. தனித்தனியான மின்னணு சமூக வலைதள நுகர்வுக்கு பழக்கப்படும் நாம், வேகமாக கடப்பவர்களாக அரைகுறை செய்திகளை தெரிந்து கொண்டு தத்திகளாக மாறிய இந்த சூழலில், தேர்ந்தெடுத்த சினிமாவின் வாயிலாக முழு படைப்பு கருத்தாக்கத்தை புரிந்து கொள்ள இது போன்ற பொது இடங்களில் கூட்டு திரையிடல்கள் தான் சாத்தியப்படுத்தும். அந்த வகையில் கவனம் மாறாத மூன்று திரையிடல்கள் அருமை.
மூன்று படங்களையும் முழுமையாக பார்க்க வைத்த 'வீதி' முயற்சி சிறப்பு.
தாவித்தாவி போகும் சமூக ஊட நுகர்வில் முழு திரையினை நுகர்வது படைப்பாளியின் மன உணர்வை புரிந்து கொள்வது அவசியமாகிறது. அதை சாத்தியப்படுத்திய அனைவருக்கும் நன்றி.

கருத்துகள் இல்லை: