கவிதை

தனிமையில் மிதக்கும் தக்கையை போல
என் கவிதையின் கரு...
யாரேனும் பார்த்து விடக்கூடாது என்ற பதட்டத்தில் பேனாவை தவற விட்டு விடுகிறது.
வெற்றுத் தாள்கள்
கருப்பு மையின் ஒரு புள்ளிக்காக
சலசலத்து போராடுகிறது.
தக்கையின் மீது
தடுமாறி ஒரு எறும்பு ஏறிவிட,
கவிதை கௌரவப் பேனா
கை நழுவிப் போகிறது.
மனிதாபிமான துடுப்பை தேடுகிறேன்.

மூடுபனி விலக பார்த்தேன்,
என்னைப்போல் பலரும்
மனிதாபிமானத்துடன் பேனா கொண்டு சண்டை போட்டுக் கொண்டிருந்தார்கள்.
நண்பர்களே கவிதைக்கு பேனா, மனிதாபிமானத்திற்கு துடுப்பு என்றேன்.

போடா துக்கடா என்று கடந்து போனார்கள்.
ஒரு மொழியின் எழுத்து லாவகம்
கவிதையாக அகங்காரம் கொள்கிறது.
மனிதாபிமான துடுப்பு கழிவிரக்கத்தை அவலமாக தன்னை ஜோடித்து கொள்கிறது.
என்னில் மனிதாபிமானம்
கவிதையை சுரண்டி தின்கிறது.
இது எனக்கு மட்டும்தானா ?

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பேரழிவின் வாருங்காலம்

அன்னவாசல் தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்ற மகளிர் தின மரநடும் விழா மற்றும் கவிஞர் செங்கை தீபிகாவின் பறக்க தயங்கும் பட்டாம்பூச்சி நூல் வெளியீடு...

அம்பேத்கர் ஆக்கங்கள் மக்கள் பதிப்பு அறிமுகம்