அம்பேத்கர் ஆக்கங்கள் மக்கள் பதிப்பு அறிமுகம்

புதுக்கோட்டையில் நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் மற்றும் புதுக்கோட்டை மாவட்ட தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்றம் இணைந்து ஏற்பாடு செய்திருந்த, அண்ணல் அம்பேத்கரின் ஆக்கங்கள் மக்கள் பதிப்பான பத்து நூல் கொண்ட தொகுதி அறிமுகம் அண்ணலின் பிறந்த நாளான 14.4.25 அன்று மாவட்ட தலைநகரில் நடைபெற்றது. 

இக்கூட்டத்திற்கு என் சி பி ஹெச் மண்டல மேலாளர் சுரேஷ் அவர்கள் தலைமை ஏற்க மாவட்ட தலைவர் எழுத்தாளர் அண்டனூர் சுரா அவர்கள் நிகழ்ச்சி அறிமுகமும் செய்து வரவேற்பு அளித்தார்கள். நிகழ்ச்சி தொகுப்பு மாவட்ட செயலாளர் பாலச்சந்திரன் செய்ய, தொகுதிகளின் ஒவ்வொரு நூல் குறித்தும் எழுத்தாளர் பாலையா, தமுஎகச-வின் மாவட்டத் தலைவர் ராசி பன்னீர்செல்வம், அ.பெ.க.-வின் நிறுவனர் மரு. ஜெயராமன், அம்பிகா அறக்கட்டளை சந்திரா ரவீந்திரன், கஸ்தூரிரங்கன், முனைவர் சிவகவி காளிதாஸ், கவிஞர் பீர்முகமது, ஆகியோரும், சிறப்புரை கவிஞர் நா. முத்து நிலவன் த.மு.எ.க.ச. மாநிலத் துணைத் தலைவர் அவர்கள் வழங்கினார்கள். கவிஞர் பெர்னாட்ஷா அவர்கள் கவிதையுடன் நன்றியுரைடன் நிறைவுற்றது.

"தமிழக அரசு அறிமுகம் செய்துள்ள அண்ணல் அம்பேத்கர் ஆக்கங்கள் தொகுப்பு பழைய அவர்களின் நூல்களில் இருந்து மாறுபட்டது. இதுக்கு முன்னர் பதிப்பிக்கப்பட்ட நூல்கலை காட்டிலும், புதுப்பிக்கப்பட்ட தொகுதியில் குறிப்பிட்ட பொருண்மையில் குறிப்பை தேடுவதற்கு சிரமப்பட வேண்டியதில்லை. புதிய பதிப்பில்  தமிழ் கலைச்சொற்களோடு, துணைத் தலைப்புகளும் மற்றும் பல்வேறு வகையான அட்டவணை, அருஞ்சொல் பொருள்கள் கொண்டும் இலகுவாக இருக்கிறது" என்ற புதிய பதிப்பு குறித்து எல்லோராலும் சிலாகிக்கப்பட்டது. 








கருத்துகள்

பெயரில்லா இவ்வாறு கூறியுள்ளார்…
மிகச் சிறப்பு🤝
பெயரில்லா இவ்வாறு கூறியுள்ளார்…
தோழர் இந்நிகழ்வின் காணொளி கிடைக்குமா.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பேரழிவின் வாருங்காலம்

அன்னவாசல் தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்ற மகளிர் தின மரநடும் விழா மற்றும் கவிஞர் செங்கை தீபிகாவின் பறக்க தயங்கும் பட்டாம்பூச்சி நூல் வெளியீடு...