பேரழிவின் வாருங்காலம்
பேரழிவு வருங்காலங்களை நம்மை வழிநடத்தும் பேராசை ஆட்சியாளர்கள் தெரிந்தும் தெரியாதது போல் அடைகாக்கும் நேரத்தில்... (19.3.2025) நேற்றைய தினம் புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் அகில இந்திய சமாதான ஒருமைப்பாட்டுக் கழக (AIPSO) மாவட்ட குழுவின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட 1950இல் வெளியிடப்பட்ட வேர்ல்ட் பீஸ் கவுன்சிலின் ஸ்வீட நாட்டின் ஸ்டாக்ஹோம் நகரில் இருந்து வெளியான அணு ஆயுத எதிர்ப்பு பிரகடனத்தின் 75 ஆம் ஆண்டு நினைவு கருத்தரங்கம் மாவட்ட துணைச் செயலாளர் கு. ராஜேந்திரன் அவர்களின் சீரிய முயற்சியில்ந டைபெற்றது. நிகழ்வின் மாநில பொதுச் செயலாளர் மருத்துவர் இரவீந்திரநாத் அவர்களும், சமுக சமத்துவத்திற்கான டாக்டர் சங்க தேசிய செயலாளர் மரு. சாந்தி அவர்கள் மற்றும் மார்சிஸ்ட் கட்சி மாவட்ட செயலார் தோழர். எஸ். சங்கர் அவர்களின் உரை மிக முக்கியமானது. ஜப்பான் மீது வீசப்பட்ட அணுகுண்டுகள் போர் காரணங்களுக்காக அல்ல அதை சோசலிச ஆட்சி முறை பரவலை முறியடிக்கும் பொருட்டு, அமெரிக்கா பிரிட்டன் கூட்டாக செய்யப்பட்ட ஏகாதிபத்திய சதி. இப்படியாக ஏகாதிபத்தி நாடுகளின் பெரு முதலாளிகள் எல்லா தப்பையும் செய்து பெரும்பான்மை மக்களை பலி வாங்கி தெரியாதது போல் கடந்து விடுவார்கள். பூவுலகை அணு ஆயுதங்களால் சீரழித்து விட்டு சம்பந்தம் இலலாதது போல் கடந்துவிடும் இந்த நாளில் போராடி பாதுகாக்க இடதுசாரி ஜனநாயக கூட்டு முயற்சியும் தேவை என்ற கருது கோளில் நடைபெற்ற கருத்தரங்கு.
மனிதர்கள் கருவிகள் கண்டுபிடிக்க அவைகளின் வழியாக நவ நாகரிக பயன்பாட்டுக்கும் பூமியை கையால்வதற்கு எளிதானது. பல கருவிகள் மனிதன் நன்மைக்காகவும் அதே நேரத்தில் மனிதனுக்கும் சுற்றுச்சூழலுக்கு எதிராகவும் அமைந்து. இருப்பவர்கள் இல்லாதவர்கள் என்ற தந்திர உபாயத்தில் இயற்கை வளங்களை சுரண்டும் ஏற்பாட்டில் கருவிகளின் பங்கு மகத்தானதாக உள்ளது. எப்படி ஔரங்கசீப்பின் கல்லறை கலவரம் நாக்பூரை சிதறடிக்க இந்திய அரசின் அழுத்தத்தின் பொருட்டு ஊடகங்கள் சுனிதா வில்லியம்சின் சர்வதேச விண்வெளி மையத்திலிருந்து திரும்ப முடியாத நிலையில் திரும்பியதை இந்தியாவின் வெற்றியாக ஏமாற்றிக் நாக்பூர் இந்துத்துவா கலவரத்தை முடி மறைக்கிறார்களோ, அப்படிதான் போரானது நவீன ஏவுகணை கருவிகளை கொண்டு மிரட்டி சுரண்டலுக்காக, இறையாண்மையை பறிக்கிறது. பெரும்பான்மை மக்களை ஒடுக்கி ஆதிக்கம் செய்யவே அணு ஆயுதங்களும் துணை போகிறது. அன்றோடு முடியாத அந்த அணு ஆயுத பேரழிவு, காலத்துக்கும் வச்சி செய்கிற அந்த ஏற்பாட்டை எதிர்க்கும் துணிவை அகில இந்திய சமாதான கழகமும், வேர்ல்ட் பீஸ் கவுன்சிலின் அங்கமாக தொடர்ந்து செய்து வருவகிறது. உலகெங்கிலும் இடதுசாரி சோசலிஸ்ட் அரசுகள் அதை முன்னெடுப்பது அதன் பலா பலன்களை சமூகம் பெற்றதையும் இக்கருத்தரங்கில் நினைவு கூறப்பட்டது. அதன் வழியாக எதிர்காலத்திலும் தொடர வேண்டிய அவசியத்தையும், கடமையையும் உணர்த்துவதாக கருத்தரங்கத்தின் மைய்யப் புள்ளியாக இருந்தது.
ஹிரோஷிமா, நாகசாகியில் போடப்பட்ட அணுகுண்டுகள் பெண்கள் குழந்தைகள் மருத்துவர்கள் நல்லவர் கெட்டவர் என்று எவரையும் விட்டு வைக்காமல் அழித்துவிட்டது. ஐந்து வினாடியில் லட்சம் பேருக்கு மேல் உயிரிழப்பு, 80 ஆயிரம் பேர் பாதிப்பு, 80 சதவீத கட்டிடங்கள் அழிவு, மருத்துவர்கள் செவிலியர்கள் என 80% மேல் இறப்பு, 250 மருத்துவமனைகள் முழுதாக பாதிப்பு, இன்றுவரை பாதிப்பு தொடர்கிறது. அணு ஆயத விபத்திற்கு எந்தவிதமான மருத்துவமும் இன்று வரையிலும் கண்டுபிடிக்கப்படவில்லை. அணு ஆயுதம் இந்த பூமியை பல தடவைகள் அளிக்கக்கூடிய அளவிற்கு ஒவ்வொரு நாடும் வெளிப்படையாகவோ ரகசியமாகவோ தயாரித்து வைத்திருக்கின்றனர். எந்த நாடும் இன்னொரு நாட்டின் மீது பயன்படுத்த முடியாத அளவுக்கு உலகம் தழுவிய நெருக்கடியில் இருந்தாலும். வல்லரசு நாடுகள் தயாரித்துக் கொண்டே இருக்கின்றன.
பகைவருடன் பக்கத்தில் பயணிக்கும் போது அவர் ஒரு ஆயுதம் வைத்திருந்தால், நாமும் அதே ஆயுதம் வைத்திருக்கும் போதுதான் பாதுகாப்பு இல்லை என்றால் அவர் எப்போது வேண்டுமானாலும நம்மை தாக்குவார் என்ற போக்கிலேயே எல்லா நாடுகளும் பிறருக்காக தங்களின் சக்தியை நிரூபிக்கும் பொருட்டு அணு ஆயுதங்களை தயாரிக்கிறது.
தவறான காரணங்களுக்காவோ அவை மோசமான நபர்களின் கைகளில் அல்லது விபத்துகளின் சிக்கும் என்றால் கண்டிப்பாக உலகம் மூன்றாவது உலகப் போரானது, அழிவுக்குப் பிறகு, மனித சமுகம் கற்களால் சண்டை போடுவார்கள் என்கின்ற ஆல்பர்ட் ஐன்ஸ்டீனின் கூற்று உண்மையாகிவிடும்.
பொக்ரான் அணுகுண்டில் வாஜ்பாய் அரசாங்கம் 5 குண்டுகளை வெடித்து பாகிஸ்தானை பயமுறுத்த நினைத்தது. அடுத்த நான்கு மாதத்திற்குள் பாகிஸ்தான் 6 குண்டுகளை வெடித்து இந்தியாவை கலங்கச் செய்தது. மூன்று நிமிடங்களில் இரு நாடுகளும் தங்களுக்குள் சண்டையிட்டால் உடனடியாக தங்கள் தலைநகரமும், அதன் மக்கள் திரல் அழிந்து போவார்கள். ஒரு மோசமான சர்வாதிகாரியிடம் சிக்கினால் விலைவு விபரிதாமாகும் அது அண்டை நாட்டுக்குதான் கவலை. இப்படி கவலைகளோடு இதை நாம் தயாரித்து பாதுகாக்க வேண்டுமா? இதுவரை அணு ஆயுதப் போரில் பாதிக்கப்பட்டவர்களுக்கான மருத்துவ சிகிச்சை முறைகள் கண்டுபிடிக்கப்படவில்லை. அப்படி இருக்க இன்றைக்கு பேரரசுகள் உலகை ஆள தன் கட்டுக்குள் கொண்டுவர அல்லது எதிரியை பயமுறுத்த தொடர்ந்து இதை செய்து கொண்டே இருக்கிறார்கள்.
அணு ஆயுத பாதுகாப்பு இடங்களில் பாதுகாப்பு குறைபாடு அல்லது இயற்கை பேரிடர்களால் அணு ஆயுதங்கள் பிறழ்வாக செயல் பட நேர்ந்தால், இந்த பூமியும் அதை சார்ந்த அத்தனை உயிரினங்களும் மிகப்பெரிய சிக்கலை சந்திக்கும். உலகில் உள்ள அணு ஆயுதங்கள் வெடித்தல் பூமியை சுற்றி பனி முட்டங்கள் ஏற்பட்டு கரப்பான் பூச்சி நிங்கலாக எல்லாம் அழிந்து போகும். எனவே அணு ஆயுதம் என்பது மொத்த மக்களுக்கும் சுற்றுச்சூழலுக்கும் சூனியமே.
அணு ஆயுதம் மனிதன் தற்கொலை செய்து கொள்ளும் போர் தந்திரமே! காலநிலை மாற்றம் உலக வெப்பமயம் என்கின்ற புதிய சூழலில் நமது சந்ததிகள் பல்வேறு செயற்கை நெருக்கடிகளை இயற்கை இடர்பாடுகளை சந்திக்கும் இந்த வேலையில், கண்டிப்பாக அணு ஆயுதம் தயாரிப்பது குற்றம், தொழில்நுட்பங்களை பகிர்ந்து கொள்வது விரோதம் என்கின்ற புதிய போக்கில் நாம் பயணிக்க வேண்டி இருக்கிறது.
1. அணு ஆயுத தயாரிப்பு கூடாது உலகில் 124 நாடுகளில் 122 நாடுகள் ஐநாவின் அறிக்கையில் கையெழுத்து விட்டனர். இந்தியா கையெழுத்து போடாமல் வெளியேறிவிட்டது. (தந்திர உபாயம்)
கருத்துகள்