கவிதையியல் - நூல் அறிமுகம்
கவிதையியல் - வாசிப்பும் விமரிசனமும் முனைவர் க . பூரணச்சந்திரன் வெளியீடு:- அடையாளம் - 2013 ISBN 978 81 7720 192 5 பக்கம்:- 144 விலை ₹120 "கவிதை என்பது ஒருவகை விளையாட்டு. அது மொழியின் வாயிலாகத் தன்னை நிகழ்த்திக்கொள்கிறது. எந்த ஒரு விளையாட்டுக்கும் ஆட்ட விதிகள் உண்டு. கவிதை என்னும் கண்ணாமூச்சி ஆட்டத்துக்கான விதிகளைப்பற்றி அரிஸ்டாட்டில், தொல்காப்பியர் முதல் இன்றுவரை, ஏராளமான கோட்பாடுகளும் நடைமுறைகளும் எழுதப்பட்டிருக்கின்றன. அந்த விதிகளின் தொகுப்பில் இக்காலக் கவிதைகளுக்குத் தேவையான சில கருத்துகளையும் பழங்காலக் கவிதைகளை இரசிப்பதற்கும் ஆராய்வதற்குமான சில கருத்துகளையும் முன்வைக்கிறது இந்நூல். ஈராயிரம் கால நெடும்பரப்பில் கவிதையும் கவிதையியலும் என்னவாக இருந்தன; எப்படியெல்லாம மாறி வந்திருக்கின்றன என்பது பற்றி இந்த நூல் ஆராய்கிறது. கவிதையைப் பற்றி உலகளாவிய மரபார்ந்த சிந்தனையாளர்கள், நவீனவாதிகள், ருஷ்ய உருவவாதிகள், பிற சிந்தனையாளர்கள் என்னென்ன சொல்லி இருக்கிறார்கள் என்பதை எளிமையான சுவைமிக்க நடையில்...