தைல மரம் கூடாது... (AIPSO)
புதுக்கோட்டை மாவட்டத்தில் 58,000 ஏக்கர் காடுகள் இருந்ததாக பழைய புள்ளி விவரம். ஆனால் சற்றேக்குறைய 50 ஆயிரம் ஏக்கர் தைல மரக் காடுகளே உள்ளன. இதற்கு அரசு வைத்திருக்கும் பெயர் "சமூக வனக் கடுகள்" ஒரே வகை தாவரத்தை பயிர் செய்து விட்டு அதை சமூக நலக் காடுகள் என்பது எப்படி சரி ? இது புரியாத புதிர்தான்.
தைல மரத்தின் எந்த பகுதியும் மனிதனுக்கோ விலங்குகளுக்கோ பயன்படாது. பல்லுயிர் சூழலுக்கு எதிரானது. ஆனால் அரசுக்கு பராமரிப்பு குறைவு, சில குறிப்பிட்ட நபர்களுக்கு பல்வேறு வகையில் வருமானமாக அமைவதும், அரசின் சில துறைகளுக்கு ஊதியப் பலன்களுக்கு இதை நம்பி இருப்பதால் தொடர்ச்சியாக இதை செய்து வருகிறது. நாற்பது ஆண்டுகளாக பல்வேறு தன்னார்வ அமைப்புகள், விவசாய சங்கங்கள் அறப்போராட்டம், அரசுக்கு எதிரான போராட்டம் மற்றும் நீதிமன்ற சட்ட போராட்டம் எனத் தொடர்ந்து முயற்சிக்கின்றனர். போராட்டக்காரர்கள் எந்த வகை குற்றச்சாட்டுகளை நீதிமன்றத்தில் வாதிடுகிறார்களோ அதற்கு தகுந்தார் போல் லாவகமாக தப்பிக்கும் போக்கு அரசிடம் இருக்கிறது. அகில இந்திய விவசாய சங்கத்தின் மாநில செயலாளர் தனபதி ஒருங்கிணைப்பில் பல்வேறு தன்னார்வலர்கள், ஊராட்சி மன்ற தலைவர்கள் அரசியல் கட்சி பிரமுகர்கள் என தங்கள் அரசியல் அடையாளத்தை கடந்து மாவட்டத்தின் சுற்றுச்சூழலை பாதுகாக்க தொடர்ந்து போராடுகின்றனர். நீண்டநாள் போராட்டத்தின் விளைவாக மதுரை உயர்நீதிமன்றம் 5 பேர் கொண்ட கண்காணிப்பு குழுவை அமைத்து ஆய்வு அறிக்கையினை தாக்கல் செய்ய சொல்லி இருக்கிறது. அதன் பொருட்டு அகில இந்திய சமாதான ஒருமைப்பாட்டு கழக மாவட்ட துணைச் செயலாளர் தோழர் பழ. குமரேசன் அவர்கள் தொடர்ந்து முன் முயற்சி எடுத்து, நமது இயக்கத்தின் சார்பாக பங்கு பெற்றார். இந்த மகத்தான நிகழ்வு மாவட்டம் முழுவதும் மூன்று நாட்கள் களப்பயணம் மேற்கொள்ளப்பட்டு ஆய்வறிக்கை தயாரித்து வழங்கப்பட்டுள்ளது. இன் நிகழ்வில் நமது இயக்கத்தின் இருதலை உறுதி செய்த அவருக்கு அன்பும் நன்றியும்.
தைல மரம் கூடாது 👈🏾 காணொளி
கருத்துகள்