நமக்கு தேவை; போராட்டமா?, போரா?.


வளர்ந்து வரும் மூன்றாம் உலக நாடுகளுக்கு போர் கூடாத ஒன்று. பொருளாதாரம், உள் நாட்டு நெருக்கடிகளை கொண்ட,  நாடுகள் தங்களுக்கிடையே பேசி தீர்க்கும் நம்பிக்கையான ராஜீய உறவை பேணவேண்டும். 
தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுகள் சிவில் சமுகத்தினை அரசியல் சாசன வழி பாராளுமன்ற ஜனநாயக ரீதியாக மக்களை வழி நடத்துகிறது. இந்திய அரசும், பாகிஸ்தான் அரசும் அதையே செய்கிறது. பொருளாதார ஆதாயத்திற்காக சில குழுக்கள் அருகில் இருக்கும் நாடுகள் மீது பகையை வளர்த்து அதன் வழி சிறு குழுக்கள் தீவிரவாத நடவடிக்கை ஏற்படுத்தி இரு நாடுகளுக்கு இடையே பதட்டத்தை உருவாக்குகிறது. இது ஆயுத வியாபாரிகளுக்கு லாபம். சர்வதேச அளவில் யார் இதை செய்கிறார்கள் என்பது நாம் அறிந்த ஒன்று. 

கல்வியில் பொருளாதாரத்தில் பண்பாட்டில் பின்தங்கி இருக்கிற நாடுகளின் சீக்கிரம் இது போன்ற தேச விரோத தீவிரவாத நடவடிக்கைகளில் சிலர் இறையாகி போகி அது குறுங்குழுவாக மெது மெதுவாக பாசிசமாக பரிணமித்து நாடுகளுக்கு இடையே பகை உணர்வை வளர்த்து விடுகிறது. எங்கோ தோன்றும் இந்த நிகழ்ச்சி ஊழல் மலிந்த நிர்வாக முறைமைகளால் நீண்ட நாளாக அனுமதித்ததின் விளைவால் சொந்த நாடுகளே அவைகளை கட்டுப்படுத்த முடியாத  வலை பின்னல் அமைப்போடு இந்த குறுங்குழுக்கல் வளர்ந்து விடுகின்றன. 
நிச்சயம் அற்ற அரசாங்கத்தை கொண்ட பாகிஸ்தான் இப்படியான குழுக்களை கட்டுப்படுத்த முடியாத சூழலில் வளர்ந்து இந்தியாவிற்கு தலைவலியாக முடிகிறது.  தங்கள் நாட்டில் பிரச்சனை ஏற்படுத்த மாட்டார்கள் என்கின்ற போது அனுமதிப்பது என்று தொடர்கதையாக இருக்கிறது. இதை ஒரு உதாரணமாக சொல்லுகிறேன். இலங்கையில் முற்று முழுதாக விடுதலைப் புலிகளை அழித்தொழித்து விட்டார்கள் என்று சொல்லப்பட்ட பிறகும் இந்தியாவில் அதற்கு தடை நீடிக்கிறது ஆனால் இங்கிலாந்தில் தடை இல்லை.

இப்படியாக சிறு குழுக்களாக பல்வேறு சர்வதேச சமூகங்களால் வேற வேற காரியங்களுக்காக தீவிரவாதத்தை ஊக்கப்படுத்துவது அது பின் ஒரு நாளில் பெரிய வலை பின்னலாக வளர்ந்து நிற்பது, அது சொந்த நாட்டு மக்களையும், அந்நிய பிற நாட்டுக்கு மீதும் எந்தவிதமான வளர்ச்சித் திட்டங்களையும் ஊக்குவிக்காது, மக்கள் பணிகளை செய்யாது, ஜனநாயகங்களை பேணாது, ஹலோ வெறும் அழித்தொழிப்பு, அல்லது பழிவாங்கு வேலையை மட்டும் செய்து கொண்டிருக்கக் கூடிய ஆயுத குழுக்களை அனுமதிக்காது அப்புறப்படுத்த வேண்டும். இதுபோன்ற நிகழ்வுகளில் தீவிரவாதிகள் போர்களை விரும்புகின்றனர். அவர்களை ஒழிக்கும் பொருட்டு மக்களை வழிநடத்துகின்ற அரசு அதே பாதையில் செல்வது உண்மையில் சொந்த மக்களை பலியிடுவதிலே கொண்டு செல்லும். இரு நாடுகளும் பேசி தீவிரவாதிகளை அப்புறப்படுத்துவதை சரி. 
கடந்த காலங்களில் தெற்காசிய கூட்டமைப்பு நாடுகள் நேபாளம் இலங்கை இந்தியா பாகிஸ்தான் போன்ற நாடுகளில் ஒருங்கிணைந்து உள்ளூர் தீவிரவாதத்தை எதிர்கொண்டன. அந்த வகையில் தான் இலங்கையில் உள்நாட்டு கலவரம் முடிவுக்கு வந்தது. அதேபோன்று ஒரு முடிவை கை கொள்ளாமல் இப்படி வலிமை மிகுந்த நாடு பதட்டமான நாட்டின் மக்களை போர் என்ற நெருக்கடிக்கு தள்ளுவது பொருத்தமற்ற ஒரு செயல். இன்று சரி என்று பட்டாலும் நீண்ட கால நோக்கில் இது இருவருக்கும் தலைவலியே. 

நாம் புரிந்து கொள்ள வேண்டியது பெரும்பான்மை உழைக்கும் மக்கள் குறைந்தபட்ச அரசு சேவைகளைக் கூட போராடி பெற வேண்டி இருக்கிறது. வாக்குகளை அளிக்க மட்டும் தெரிந்த மக்களை, போருக்காக திசைத் திருப்புவது அவர்களை ஓட்டாண்டி ஆக்கும் செயலே. இந்திய அரசை வழிநடத்தும் பெரு முதலாளிகளும், உயர் பொறுப்பு அதிகாரங்களும் இதன் வழி ஆதாயம் அடைவது, பாதுகாப்பாக இருப்பது மட்டுமே. போரின் செலவினங்களும், பாதிப்பும் உழைக்கும் மக்களையே வந்தடையும். 

இன்றைய நிதி மூலதன அதிகார இந்தியாவின் உழைக்கும் மக்களின் அன்றாட வாழ்வாதாரம் சுருங்கி கொண்டே வருகிறது, 12 மணி நேரம் உழைத்தால் கூட அவர்கள் திருப்திகர வாழ்க்கை வாழ முடியவில்லை, போர் மேலும் சிரமத்தையே அளிக்கும். உள்ளூர் அரசு நிர்வாகத்தை தனக்கு சாதகமாக வேலை செய்ய வைப்பதற்கு பெரிய போராட்டத்தை நடந்து கொண்டிருக்கிறார்கள். அரசின் சிறு சேவையை பெறுவதற்கே பலமுறை போராடியும் அல்லது திரை மறை ஊழலால் சாதிக்க வேண்டி இருக்கு.  உழைப்பாளிகளுக்கு குறைந்தபட்ச அரசின் சேவையை பெறுவதற்கு போராட்டமே வழியாக இருக்கிறது. 
அப்படி இருக்க அவர்களுக்கு ஏன் போர்? அதிகார வர்க்கத்தின் அக்கப்போர்!

பாட்டாளிகளுக்கு போர் எதிரி, போராட்டமே நிரந்தர வாழ்வாக.
இது இந்தியாவானாலும் சரி! பாகிஸ்தானாலும் சரி! 
எந்த நாடுகளுக்கு இதுவே யதார்த்தம். 

மே 9 சர்வதேச சமூகம் இணைந்து பாசிசத்தை அடிபணிய வைத்தது 80ம் ஆண்டு நாள். அதுவும் சோசலிச ரஷ்யாவின் இடதுசாரி ஆளும் கட்சியின் வழிகாட்டலில் தீரமிக்க தியாகத்தால். செஞ்சேனை இல்லாமல் இருந்தால் இன்று ஜனநாயகமும் இல்லை, சோசலிசமும் இல்லை. சர்வாதிகார ஹிட்லரின் பாசிசம் இந்த சமூகத்தை துண்டு துண்டாக சிதைத்து, மேலும் பல வதை முகாம்கள், கொலைக்களங்களால் பூமியை சுடுகாடாய் மாற்றி இருக்கும். 

போர் தீர்வு அல்ல. 
உழைக்கும் மக்களுக்கு போராட்டமே தீர்வு.
வலிமையான ராணுவம், 
உலக பட்டினியில் பரிணமித்ததே...
படைகளின் மிடுக்கு, 
உழைப்பவர்களிடம் திருடிய உபரி...
ஆக 
வலிமையான ராணுவங்கள், எளியவர்களால் தோல்வியானதே வரலாறு.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பேரழிவின் வாருங்காலம்

அம்பேத்கர் ஆக்கங்கள் மக்கள் பதிப்பு அறிமுகம்

அன்னவாசல் தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்ற மகளிர் தின மரநடும் விழா மற்றும் கவிஞர் செங்கை தீபிகாவின் பறக்க தயங்கும் பட்டாம்பூச்சி நூல் வெளியீடு...