படைப்பரங்கம் : த.க.இ.பெ., புதுகை மாநகரம்

தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்றம் புதுகை மாநகர கிளையின் படைப்பிறங்கும் புதுக்கோட்டை திலகர் திடலில் எழுத்தாளர் சி பாலையா அவர்களின் தலைமையில் நடைபெற்றது. மேற்கண்ட நிகழ்வில் மாநகர செயலாளர் கவிஞர் பெருமாள் பட்டி பூ அடைக்கலம் அவர்கள் வரவேற்புரையும் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பையும் சீரிய முறையில் செய்திட, கவிஞர் பெர்னாட்ஷா, கவிஞர் சிவக்குமார், கவிஞர் சின்ன கனகு, மாவட்ட பொருளாளர் கவிஞர் சோலச்சி, கவிஞர் கண்ணதாசன் ஆகியோர் கவிதை படைத்தனர். பாவலர் அழகு நிலவரம் சங்கப் பாடல்களும் அதை தழுவிய சினிமா பாடல்களும் ஒப்புமை ஒப்புமை காட்டினார், கவிஞர் அடைக்கலம் மெட்டுப் பாடல்களை பாடினர். ஜெயித்துக் காட்டுவோம் ஜெயக்குமார், சீனி சேதுராமன், ஏ ஒய்ஃப் ராஜேஷ் கண்ணா, ஆகியோர் பங்கு பெற்றனர் எழுத்தாளர் சி பாலையா மு சிவானந்தம் அவர்களின் புதிய நூலை அறிமுகம் செய்தார். மாநகரத் தலைவர் முட்டாம்பட்டி ராசு அவர்கள் நெறியாண்டி செய்தார். முன்னதாக மாவட்ட தலைவர் செயலாளர் பொருளாளர் ஆகிய புதிய பொறுப்பாளர்கள் கதர் ஆடையில் கௌரவம் செய்யப்பட்டனர். மாவட்டச் செயலாளர் எதிர்வரும் மாநில அளவிலான சிறுகதை பயிலரங்கு நடத்துவதற்கான திட்டம் மற்றும் மாநில செயற்குழு முடிவுகளை முன் வைத்தார். இறுதியாக மாவட்ட தலைவர் எழுத்தாளர் அண்டனூர் சுரா அவர்கள் மொத்த நிகழ்ச்சியின் சாரத்தை அதன் சிறப்பை கட்டியம் கூறினார். மாநகரப் பொருளாளர் சிவக்குமார் அவர்கள் நன்றியுடன் நிகழ்வு நிறைவுற்றது. 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பேரழிவின் வாருங்காலம்

அம்பேத்கர் ஆக்கங்கள் மக்கள் பதிப்பு அறிமுகம்

அன்னவாசல் தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்ற மகளிர் தின மரநடும் விழா மற்றும் கவிஞர் செங்கை தீபிகாவின் பறக்க தயங்கும் பட்டாம்பூச்சி நூல் வெளியீடு...