சமூக நீதி பாடகர் தோழர் லெனின் படத்திறப்பு... திருச்சி

தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்றம் திருச்சி புறநகர் மாவட்ட செயலாளரும், மேடைதோறும் இடதுசாரி அரசியலையும் சமூக நீதி அரசியலையும் தொடர்ந்து பாடுபொருளாக கொண்டு விழிப்புணர்வு ஏற்படுத்திய, அரசியல் தெளிவும் சமூக நீதி புரிதலும் குறிப்பாக இடதுசாரி அரசியலின் பால் ஈர்ப்பால் ஒரே ஆள், ஒரே பறை சமகால அரசியலை எளிய மக்களுக்கு சமூக நீதியை பாடுபொருளாக்கி ஈர்ப்பை ஏற்படுத்தும் புரட்சிகர குரலுக்கு சொந்தக்காரர் தோழர் லெனின் மறைவு  இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் புரட்சிகராக பாடராக மேடை தோறும் அலங்கரித்த லெனின் இழப்பு சரி செய்ய சிறிது காலமாகலாம். 
தவிர்க்க முடியாத காரணத்தினால் அவர் இறப்புக்கு செல்ல முடியாமல் படத்திறப்புக்கு சென்றேன். தோழர் இந்திரஜித் படைத்தை திறந்து புகழஞ்சலி செலுத்திட, அருகிலேயே குடியிருக்கும் கவிஞர் கலியமூர்த்தியின் புகழஞ்லியுரை சிறப்பு. பாரதி கலைக்குழுவின் இணைபாடராக இருக்கும் காந்தி கணேசன் அவர்களின் தொகுப்புரையோடு தோழர் லெனின் நினைவுகளை பலரும் பகிர்ந்து கொண்டனர். குடும்பத்தார்கள், நண்பர்கள், தோழர்கள் என கச்சிதமான நினைவரங்கம். உணவு ஏற்பட்டோடு விடை.

தோழர் கவிஞர் கலியமூர்த்தி அவர்கள் தேநீர் கடைக்கு முன்னதாக அழைத்து சென்றார்கள் அங்கு "விடுதலை" நாளிதழ் தினம்தோறும் வாசிக்க கிடக்கிறது.
திரும்பும் வழியில் அம்மாசத்திர மகாவீரர் புகை சிற்ப தொல்லியல் பகுதியில், ஊற்றுக் குடி நீரும், ஓய்வும், உறக்கமும் இன்றைய பொழுது அர்த்தமுள்ளதாக...

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பேரழிவின் வாருங்காலம்

அம்பேத்கர் ஆக்கங்கள் மக்கள் பதிப்பு அறிமுகம்

அன்னவாசல் தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்ற மகளிர் தின மரநடும் விழா மற்றும் கவிஞர் செங்கை தீபிகாவின் பறக்க தயங்கும் பட்டாம்பூச்சி நூல் வெளியீடு...