இடுகைகள்

செப்டம்பர், 2025 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

சிறுகதைகள் 100 - அண்டனூர் சுரா வெளியீடு

படம்
எழுத்தாளர் தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்ற புதுக்கோட்டை மாவட்டத் தலைவர் ஆசிரியர் அண்டனூர் சுரா சிறுகதைகள் 100 நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் இரண்டு தொகுதி வெளியீட்டு நிகழ்வு புதுக்கோட்டை நகர் மன்றத்தில் 27.9.25 மாலை தமிழ்ச்செம்மல் கவிஞர் தங்கமூர்த்தி தலைமையில் நடைபெற்றது.  நிகழ்வில் முதல் தொகுதி கவிதைப்பித்தன் அவர்கள் வெளியிட்டு விழா பேருரை நிகழ்த்தினார்கள். இரண்டாவது தொகுதியை கவிப்பித்தன்   வெளியிட்டு எழிலுரை வழங்கினார்கள். புதுக்கோட்டைத் தமிழ்ச் சங்கம், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் மற்றும் தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் இணைந்து இந்த ஏற்பாட்டை செய்திருந்தன. நிகழ்வில் 250 பேருக்கும் குறையாத இலக்கிய ஆர்வலர்கள் பங்கு பெற்றனர்.  2004 முதல் 2024 வரையிலான இதழ்களில் நூலாக்கம் பெற்ற இணையவெளியில் வந்த சிறுகதைகளை அண்டனூர் சுராவின் சிறுகதைகள் 100 என்ற இரண்டு தொகுதிகளாக அறிமுகம் செய்தனர். சுராவின் எழுத்துக்கள் படிநிலைப் பண்பாட்டில் இருந்து சமூகத்தை சமூக நீதி என்ற சமத்துவ கோட்பாட்டை நோக்கி நகரும் அரசியலை பேசக்கூடியாதக அமைகின்றன. அந்த வகையில் தன்னைச் சுற்றிய மண்...

பாரதி முற்றம்

படம்
தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்றம் அறந்தாங்கி கிளை மற்றும் பாரதி முற்றம் இணைந்து ஏற்பாடு செய்த நூல் வெளியீடு, இலக்கிய சந்திப்பு அறந்தாங்கி எல்.என்., புரத்தில் மாவட்ட மதிப்புரு தலைவரும் பாரதிமுற்ற நிறுவன தலைவரும் கவிஞர் தோழர் அஜய்குமார் கோஷ் சீரிய ஏற்பாட்டில் குழந்தைகளின் பாடலோடு தொடங்கியது. நகரத் தலைவர் இலக்கிய ரவிச்சந்திரன் அவர்கள் வரவேற்புரை கவிதை வாசித்திட, தமிழக அரசின் நல்லாசிரியர் விருது பெற்ற இருவரை கௌரவித்தல், சிறந்த ஆசிரியர்கள் பணியாளர்கள் அறிமுகம், கருத்துரைகள் என நடைபெற்றது. முனைவர் சிவகவி காளிதாஸ் அவர்களின் மேழி மற்றும் பறை = அறிவித்தல் நூல்களை மாவட்டச் செயலாளர்கள் ஒட்டடை பாலச்சந்திரன் அறிமுகம் செய்திட, நல்லாசிரியர் மு சிவானந்தம் அவர்கள் வெளியிட, முதல் பிரதிகளை ஓய்வு பெற்ற மாவட்ட கல்வி அதிகாரி சாமி சத்தியமூர்த்தி அவர்கள் பெற்றுக்கொண்டு விழா பேருரை ஆற்றி நிறைவு செய்தார்கள்.  நன்றியுரை அறந்தாங்கி நகர செயலாளர் சிவா அவர்கள். பிறகு உணவோடு நிறைவுற்றது

ஏட்டிக்குப் போட்டி...

படம்
1. சமீபத்தில் எழுத்தாளர் நண்பர் ஒருவரின்  "...குண்டு சட்டியில், கழுதை ஓட்டுகிறார்கள்... " என்று கடுப்பாக எழுதி இருந்தார்கள். வருத்தம் தரக்கூடிய பதிவு, வெற்றி பெற்றவருக்கு மகிழ்ச்சி அளிக்க கூடியதாக இருக்கலாம், (போட்டியில் பங்கேற்கா விரும்பாத) பிற படைப்பாளிகளை விலங்கோடு ஒப்பிடுவது சரியா? பரிசு பெறாத படைப்புகள் படைப்பு ஆகாதா? உங்கள் தராசு பாரபட்சமானது. தொகையை அளவிடுவதாக இருக்கிறது? வழங்குபவர்களின் பாரம்பரியம் குறித்து அது பேசுவதில்லை. எல்லா படைப்பாளிகளும் "தருமியாக"  இருக்க வேண்டியதில்லை. "பரிசு பெற்றால் குதிரை, பரிசு பெறவில்லை என்றால் கழுதை." 2. நடிகரின் இறுதி ஊர்வலத்தில் மனைவி குத்தாட்டத்துடன் அஞ்சலி செலுத்தியது. பலரை நெளிய வைத்துவிட்டதா? 3. தமிழக அரசின் இளையராஜா பாராட்டு விழாவில் முதல்வர் முன்னிலையில் ரஜினி குறுக்கீடும், இளையராஜாவின் 'பீர்' புராணம் தங்கள் மதிப்பை பொதுவில் தாங்களே உடைத்தது மூன்று குறித்தும் முக்கோண பார்வை எழுத்தாளர் நண்பரின் 'குதிரை' என்ற பதத்தை மாற்றி 'கழுதை' என்று எழுதினார். விலங்குகள் அதற்குரிய பரிணாமம...

சீனா- இந்திய உறவு 🤙🏽 எதிர்பாட்டு

படம்
அமெரிக்க இந்திய வர்த்தக முரண்பாடால், இந்திய சீனா நெருக்கத்தை இடதுசாரிகள் மகிழ்ச்சியை வெளிப்படுத்துகின்றனர். மேலோட்டமாக சரி என்று தோன்றினாலும், புவிசார் அரசியலில் நீண்ட நாள் ராஜிய உறவுக்கு நல்ல சமிக்கை அல்ல.  அமெரிக்கா ஜனநாயக நாடு,  இன்றைய இந்தியா பாசிச பாங்கோடு நடந்து கொள்கிறது. உலகெங்கிலும்  சிறுபான்மையினர் பாதிக்கப்படும் போது அரசியல் ரீதியாக அமெரிக்கா தண்டிப்பது, கண்டிப்பது, கவலை கொள்வது, அறிக்கை வெளியிடுவது என தொடர் நிகழ்வு நடைபெறுகிறது. அதனால் குறைந்தபட்ச ஜனநாயகம் இருக்கிறது. (இஸ்ரேலுடன் இணைந்து பாலஸ்தீனத்தை அழிப்பு செய்வது வேறு) ஐநா மன்றங்களில் நெறிபிறழும் இந்தியாவின் உள்நாட்டு அரசியலை பிற நாடுகளை உதவியுடன் தனிமைப்படுத்தும் வேலையை அமெரிக்கா செய்யும். அது பொருளாதார ஆதாயத்திற்கான உபயமாக கூட இருக்கலாம். ஆனால் சீனா அப்படி இருக்குமா? இருக்காது! தன் நலனுக்காக பிற உள்நாட்டு சிக்கல்களில் இடதுசாரி தீர்வை தைரியமாக முன் வைக்கவோ, அமுல்படுத்தவோ செய்யாது. குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால், அதன் நேச நாடுகளின் பாசிச ஆட்சியாளர்களின் நடவடிக்கைகளை கண்டும் காணாதது போல் இருக்கும். வினைபு...