சீனா- இந்திய உறவு 🤙🏽 எதிர்பாட்டு
அமெரிக்க இந்திய வர்த்தக முரண்பாடால், இந்திய சீனா நெருக்கத்தை இடதுசாரிகள் மகிழ்ச்சியை வெளிப்படுத்துகின்றனர். மேலோட்டமாக சரி என்று தோன்றினாலும், புவிசார் அரசியலில் நீண்ட நாள் ராஜிய உறவுக்கு நல்ல சமிக்கை அல்ல.
அமெரிக்கா ஜனநாயக நாடு,
இன்றைய இந்தியா பாசிச பாங்கோடு நடந்து கொள்கிறது. உலகெங்கிலும்
சிறுபான்மையினர் பாதிக்கப்படும் போது அரசியல் ரீதியாக அமெரிக்கா தண்டிப்பது, கண்டிப்பது, கவலை கொள்வது, அறிக்கை வெளியிடுவது என தொடர் நிகழ்வு நடைபெறுகிறது. அதனால் குறைந்தபட்ச ஜனநாயகம் இருக்கிறது. (இஸ்ரேலுடன் இணைந்து பாலஸ்தீனத்தை அழிப்பு செய்வது வேறு)
ஐநா மன்றங்களில் நெறிபிறழும் இந்தியாவின் உள்நாட்டு அரசியலை பிற நாடுகளை உதவியுடன் தனிமைப்படுத்தும் வேலையை அமெரிக்கா செய்யும். அது பொருளாதார ஆதாயத்திற்கான உபயமாக கூட இருக்கலாம். ஆனால் சீனா அப்படி இருக்குமா? இருக்காது! தன் நலனுக்காக பிற உள்நாட்டு சிக்கல்களில் இடதுசாரி தீர்வை தைரியமாக முன் வைக்கவோ, அமுல்படுத்தவோ செய்யாது. குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால், அதன் நேச நாடுகளின் பாசிச ஆட்சியாளர்களின் நடவடிக்கைகளை கண்டும் காணாதது போல் இருக்கும்.
வினைபுலத்தையும், ராணுவ செலவினத்தை அதிகரித்து சர்வாதிகார போக்கை உலகுக்கு அறிவிக்கிறது. அதன் சோசலிச கருத்தாக்கங்களை கூட, உலகம் உணரும் கருத்தாக கூட பிரதிபலிப்பதில்லை. அப்புறம் எப்படி செயல் நடவடிக்கை அது பங்காற்றும்?
மியான்மார்? பங்களாதேஷ்? இலங்கை? உள் நாட்டு பதட்டத்தில் சீனா மௌனமாகவே. மணிப்பூர் நிகழ்வில்? அமெரிக்கா தேவலாம். சீனாவும் ஆற்றிய பங்கு நமக்கு தெரிந்ததே?
BRICKS கூட்டமைப்பை வரவேற்கிறோம். ஆனால் சீனாவின் (கம்யூனிஸ்டுகளின்) கள்ள மௌனம் சர்வாதிகாரமே ?!
தோழர்களே அதிகாரம் அற்ற அரசியலில் தங்களின் சர்வதேச அக்கறையை எப்படி சரியானதோ! பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தை பெற்ற நாடு பிற உலக நாடுகள் மீது அக்கறையின்றி இருப்பது சரியா?
சீனா, ரஷ்யா, வடகொரியா நாட்டின் அதிபர்கள் தாங்களே அதிகாரத்தில் தொடர வேண்டும் என்பதற்காக தங்கள் நாட்டின் அரசியல் சாசனத்தையே மாற்றிய சர்வாதிகாரிகள். கம்யூனிஸ்ட் கட்சி உயர் பொறுப்பில் பங்காற்றியவர்களே இப்படி இருக்கும் போது, பிற நாடுகளில் பாசிச ஆட்சியாளர்களை கண்டிப்பார்களா? வாய்ப்பில்லை தோழா...
இவர்கள் உள்நாட்டு புரட்சியை ஒடுக்க இராணுவத்தை பலப்படுத்துகின்றனர். தன்னை ஒத்த நாடுகளுடன் திரை மறை கூட்டு வைத்துக் கொள்வது என புதிய பாணியிலான புவி அரசியல் தந்திரத்தை புரிந்து கொள்ள வேண்டியிருக்கிறது.
சீனாவின் மனிதவளம் தொகுத்த அறிவியல் அறிவு இந்தியாவுக்கு தேவை என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. ஏகாதிபத்திற்கு எதிரான கூட்டமைப்பு அவசியம் என்பதில் மாற்று கருத்து இல்லை. ஆனால்... நம்பிக்கை அளிக்கக்கூடிய எந்த முடிவுகளும் சோசலிச முகாம்களில் இருந்து தெரியவில்லை என்பது நிதர்சனம்.
ஒரே ஆறுதல் இந்திய மனித வளம் அவர்களுக்கு மலிவு கூலியில் விற்பனை. அதன் வழி இந்தி பேசும் மாநிலங்களில் பழைய பண்பாட்டு தொடர்ச்சியில் மாற்றம் ஏற்படும். பயணம் மனிதர்களை பண்படுத்தும் அரசை அல்ல.
கருத்துகள்