ஏட்டிக்குப் போட்டி...
1. சமீபத்தில் எழுத்தாளர் நண்பர் ஒருவரின்
"...குண்டு சட்டியில், கழுதை ஓட்டுகிறார்கள்... " என்று கடுப்பாக எழுதி இருந்தார்கள். வருத்தம் தரக்கூடிய பதிவு, வெற்றி பெற்றவருக்கு மகிழ்ச்சி அளிக்க கூடியதாக இருக்கலாம், (போட்டியில் பங்கேற்கா விரும்பாத) பிற படைப்பாளிகளை விலங்கோடு ஒப்பிடுவது சரியா? பரிசு பெறாத படைப்புகள் படைப்பு ஆகாதா? உங்கள் தராசு பாரபட்சமானது. தொகையை அளவிடுவதாக இருக்கிறது? வழங்குபவர்களின் பாரம்பரியம் குறித்து அது பேசுவதில்லை. எல்லா படைப்பாளிகளும் "தருமியாக" இருக்க வேண்டியதில்லை. "பரிசு பெற்றால் குதிரை, பரிசு பெறவில்லை என்றால் கழுதை."
2. நடிகரின் இறுதி ஊர்வலத்தில் மனைவி குத்தாட்டத்துடன் அஞ்சலி செலுத்தியது. பலரை நெளிய வைத்துவிட்டதா?
3. தமிழக அரசின் இளையராஜா பாராட்டு விழாவில் முதல்வர் முன்னிலையில் ரஜினி குறுக்கீடும், இளையராஜாவின் 'பீர்' புராணம் தங்கள் மதிப்பை பொதுவில் தாங்களே உடைத்தது
மூன்று குறித்தும் முக்கோண பார்வை
எழுத்தாளர் நண்பரின் 'குதிரை' என்ற பதத்தை மாற்றி 'கழுதை' என்று எழுதினார். விலங்குகள் அதற்குரிய பரிணாமம் அடிப்படையில், தகவமைப்போடு வளர்ந்து வரும் மிருகம். மனிதன் எவையெல்லாம் தனக்கு நெருக்கமாக பயன்படுத்துகிறதோ அவை அனைத்தும் ஆயிரம் ஆண்டுகளுக்குள் மனிதனோடு இயல்பாக வளரக்கூடிய தகுதியை பெற்றன. பெறாதவைகள் அற்றுப் போகின்றது. கழுதையும் குதிரையும் நெருக்கமான இனங்களை சார்ந்தது தான். இன்று குதிரை அற்றுப்போன ஒன்றாக உள்ளது. கழுதையும் ஏறக்குறைய அதே இடத்திற்கு வந்து விட்டது. குதிரை கம்பீரத்தை குறிப்பதாக, அதிகாரத்தை அளிப்பதாக, போர் நடவடிக்கையில் முன்னணி பாத்திரமாக வகித்தது. கழுதை சுமை தூக்குவதில், மலையேற்றத்தில் பயன்படுத்தப்பட்டு வந்தது. அரசர்கள், பெரும் செல்வந்தர்கள் செல்வ குறியீடாக குதிரையை பயன்படுத்தினர். எளிய மக்கள் உழைப்புக்காக கழுதையை பயன்படுத்தினர். கழுதை மோசம் கிடையாது குதிரையின் எதிர் குறியீடாக மனிதன் உருவாக்கப்பட்டது. கழுதையும் குதிரையும் அதை தன் இயல்பில் வாழ்வதே, மனிதன் தன்னுடைய நலன் கருதி அதற்குள் பிரிவினை ஏற்படுத்தி விட்டான். இப்படித்தான் இன்று உயரக நாய்களேக்கு தெரு நாய்கள் இளக்காரமாக... சமூகத்தின் விலங்குகளை ஒப்பிட்டு மனிதனை மேன்மைப்படுத்துவதும், இழிவு படுத்துவதும் மனித பண்புதான் ஒழிய விலங்குகளின் சிறுமை பண்பு அல்ல. ஒவ்வொரு விலங்கும் அதனுடைய பரிணாம வளர்ச்சிக்கு ஏற்றார் போல் சமூகத்தில் பரவி விரைவில் தன்னை தகவமைத்து வாழ்கிறது. சூழலோடு பொருந்த முடியாத நிலையில் அற்றுப்போகிறது. குதிரைக்கும் கழுதைக்கும் மனிதப் பயன்பாடுகள் குறைந்துவிட வீட்டு விலங்குகளாக அவை காட்சி பொருளாக மட்டுமே இருக்கிறது. வருமானம் இல்லை என்றால் அற்றுப் போய்விடும். அன்றாடம் பயன்படுத்தும் பால், இறைச்சி போன்றவை செயற்கை உபாயங்கள் வந்துவிட்டால் அவைகளும் அற்று போய்விடும். இன்றைக்கு நாய் எதிர்ப்பை போல். நண்பருக்கு நான் சொல்ல வேண்டியது குதிரையும் கழுதையும் வெவ்வேறு விலங்கினங்கள், அதோடு மனிதனை ஒப்பிடுவது சிறுமை மனோபாவமே.
கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக ஆய்வு உலகத்தில் தீங்கான உயிரினம் மனிதன் என்றும், உலகில் நன்மை தரும் உயிரினம் தேனீ என்று ஆய்வு முடிவை வெளிப்படுத்தி உள்ளது.
நடிகரின் மரணத்தின் அவர் மனைவி குத்தாட்டத்துடன் அஞ்சலி செலுத்தியது எனக்கு உடன்பாடான ஒன்று. என்னதான் பிரபலமாக இருந்தாலும் அவருடைய மனைவிதான் அவரை தூக்கி சுமந்து இருப்பார்கள். நீண்ட நாள் நோய் குறியீடுடன் மனைவிக்கு பாரமாகவே இருந்திருப்பார். நடிகரின் பேட்டியில் மொடா குடிகாரர் என்பது நாம் அறிய முடிகிறது. குடி நோயினால் ஏற்பட்டும் உபாதையால் மனைவிதான் சிரமங்களை அதிகம் அனுபவித்து இருப்பார். அதிகம் அன்பும் செலுத்தி இருப்பார். நோயாளியை கவனிப்பது, பணிவிடை செய்வது, பணம் திரட்டுவது என இன்றைய சமூகத்தில் மனைவி என்னும் துணை நலன் தினம் தினம் செத்துப் பிழைக்கும் வாழ்கையுக. தனது கணவன் சுற்றுவதில் இருந்து விடுபடும் இறுதி நாளை கொண்டாடி தன்னிலை மறந்தார். இந்திய சமூகத்தில் கணவனை சகித்துக் கொள்ளும் பெண்களின் பாடு ஏதோ ஒரு வகையில் பொதுவெளியில் வெளிப்பட்டு விடுகிறது. சாமி ஆடுதல், தீச்சட்டி தூக்குதல், மனநோயாளியாகுதல், அழுது புலம்புதல், கெட்ட வார்த்தைகளை பேசுதல், என நீளமான பட்டியல் உண்டு. ஒரு குடி நோயாளியின் மனைவி சகித்துக் கொள்ளும் இந்தியாவின் சராசரி பெண்மணி. யாரெல்லாம் விமர்சனம் செய்கிறார்களோ அவர்கள் உறவினர்களில் யாரேனும் ஒருவர் இப்படி இருப்பவரே. நாம் புரிந்து கொள்ள வேண்டியது நடிகரையும், அவர் மனைவியையும் ஒரே தட்டில் நிறுத்தோம் என்றால்? நடிகரின் மனைவி எடை அதிகம், கணவர் தூசு கூட பொறமாட்டார்.
இளையராஜா பேசிக் கொண்டிருக்கும் போது முதல்வர் முன்னிலையில் ரஜினி குறுக்கீடு செய்ததும், இருவருக்கும் பொருத்தமற்ற நடவடிக்கை. தமிழகத்தில் ஆகச்சிறந்த செலிபிரிட்டிகள் இருவரும். ஏன் இப்படி நடந்து கொண்டார்கள். தனியாக பேசிக்கொள்ள வேண்டியதை அரசு விழாவில், பொதுவெளியில் பேசியது கொஞ்சம் அசூசையான நிகழ்வு.
நடிகரின் அஞ்சலி நிகழ்வில் மனைவியின் நடனத்தை ஏற்றுக் கொள்ள முடியாத மனம் தான், புகழ்வாய்ந்த மனிதர்கள் பொதுவெளியில் சிறுமைத்தனமாக நடந்து கொள்வதை மன்னிக்கிறது. ஆணாதிக்க நேர்கோடு.
மனிதர்கள் உயர்ந்தவர்கள் விலங்குகள் எல்லாம் அற்பம் என்கின்ற நிலையிலிருந்து விலங்கு நிலையோடு மனிதரை ஒப்புமை செய்வதும் அதனுடைய இன்னொரு வடிவம்.
கருத்துகள்