கொத்தி தின்னும் நினைவுகள் - மாநில கவிதை முகாம் , இராசபாளையம்
தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் ஏற்பாட்டில் ராஜபாளையத்தில் அய்யனார் அருவி அருகே சிவானந்த ஆசிரமத்தில் இரண்டு நாள் மாநில கவிதை முகாம் நடைபெற்றது. இதில் கவிஞர் சிற்பி 90, எழுத்தாளர் வண்ணதாசன் 80 ஆகியோருக்கு பாராட்டும் பிறந்த நாளும் கொண்டாடப்பட்டது. இந்நிகழ்வினை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் தோழர் மு வீரபாண்டியன் வாழ்த்துரையுடன் தொடங்கியது. மாநிலத் தலைவர் கங்கா அவர்கள் தலைமையில், சிருங்கை சேதுபதி அவர்கள் சிற்பி குறித்தும், கண்மணி ராசா அவர்கள் வண்ணதாசன் குறித்தும் புகழுரை வழங்கினர்.
இந்நிகழ்வில் எனது நான்காவது கவிதை தொகுப்பான கொத்தி தின்னும் நினைவுகள் எழுத்தாளர் வண்ணதாசன் அவர்களால் வெளியீடு செய்யப்பட்டு கலை இலக்கியப் பெரும் மன்றத்தின் பொதுச் செயலாளர் தோழர் அறம் தலைவர் தோழர் கங்கா மற்றும் அனந்தகுமார் அகிலா கிருஷ்ணமூர்த்தி யவனிகா ஸ்ரீ ராம் தோழர் கண்மணி ராசா ஆகியோர் முன்னிலையில் வெளியீடு செய்யப்பட்டது. இதில் தோழர் அகிலா கிருஷ்ணமூர்த்தி அவர்களின் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்ட பாடலும் வெளியீடு செய்யப்பட்டது.
பிறகு கவிதை குறித்தான பல்வேறு பொருமைகளில் நெறியாள்கை உரையாளர்கள் கருத்துறை என மூன்று அமர்வுகளும் அடுத்த நாள் கவிதை நூல் வெளியீடு பிற 4 அமர்வுகளும் இறுதியாக நிறைவுகளையும் நடைபெற்றது. முன்னதாக முதல் நாளில் கவியரங்கம் சற்று குறைய 15 பேருக்கு மேல் கவிதை அரங்கேற்றம் செய்தனர். இந்நிகழ்வில் கவிஞர் வண்ணதாசன் மருத்துவர் கணேசன் உள்ளிட்டோர் முன்னிலையில் சிறப்பான ஒரு நிகழ்வு. இப்படியான இந்த நிகழ்வில் கவிஞர் கலியமூர்த்தி, கவிஞர் ஹமீன் முஸ்தபா , கவிஞர் புகழேந்தி, தோழர் அகிலா கிருஷ்ணமூர்த்தி போன்ற உரைகள் மிகவும் கவனம் பெற்றன.
இதில் நானும் பின் காலனிய கவிதைகள் குறித்து கருத்துர வழங்கினேன். கூடுதலாக அருவியின் குளியல், அய்யனார் கோவில் பாதுகாக்கப்பட்ட வனத்துறை பார்வையில் அருமையான ஏற்பாடு. இந்நிகழ்வு வெற்றி அடைவதற்கு முதன்மை காரணமாக கைப்பேசி சாமிக்கு இல்லாதது சிறப்பு. சற்றேற குறைய 70 மாணவிகள் உட்பட மாநில முழுவதும் 150 பேர் குறையாமல் பங்கு பெற்றனர்.
கருத்துகள்