அமுத கலசம் இதழில் "சமூக துரோகம்"...



இன்றைய நவீன யுகத்தில் அறிவு என்பது பரவலானதும் எல்லோரின் கைகளிலும் உடனடியானதுமாக உள்ளது. ஏதேனும் சந்தேகம் இருந்தால் 'கூகுள் பண்ணு' என்று நாம் வளர்ந்திருக்கிறோம். அதோடு whatsapp, X தளம் போன்ற சமூக வலைத்தளங்கள், யூடியூப், ரீல்ஸ் போன்ற காணொளி காட்சிகள் மூலமாக விரைவான செய்திகளை உடனுக்குடன் தகவல்கள் சரியாகவோ சரிக்கு நெருக்கமாகவோ நம்மை வந்தடைகின்றன. போதாக்குறைக்கு ஆர்ட்டிஃபிஷியல் இன்டெலிஜென்ட் போன்ற நுண்ணறிவு அல்காரிதம் நம்மை வழிநடத்துகிறது. இணைய வழியில் நாம் எதை அதிகமாக நுகர்கிறோமோ அதன் வழி நடத்தப்படுகிறோம், என்று சொன்னால் பொருத்தம் இருக்காது. இணையத்தின் மூலம் நம்மை வழிநடத்தி வருமானத்தை எய்துவதோடு, மூளைச் சலவை செய்கிறது. கார்ப்பரேட் நிறுவனங்கள் மக்களின் அறிவு நிலையை பொறுத்து பல்வேறு பட்ட நுகர்வுகளுக்கு பல தரப்பாக சுவைபட வழங்குகின்றனர். எப்படி இந்தி தொலைக்காட்சி நாடகங்கள் தமிழ் டப் செய்யப்பட்டு நமது பண்பாடு, மொழியை சுரண்டுகிறதோ அதுபோல், வளர்ந்த பெரு நிறுவனங்கள் மனிதனை அறிதல் புரிதல் நிலையிலிருந்து விலக்கி நுகர்வை திணித்து வசியப்படுத்துகிறது.

பல்வேறு துறைகளை தெரிந்து கொள்வதும், குறிப்பிட்ட துறையில் பாண்டித்தியம் பெறுவதும் நமது கடந்த கால அறிதல் நிலையின் வளர்ச்சி. இன்றைய இணையவழி உலகம் குப்பைகளை அதிகம் தருகின்றன. அவசியமற்றதை நோக்கி திருப்பி விடுகின்றனர். முன்னெல்லாம் ஒரு நூல் படித்தோம் என்றால் முழுவதுமாக முடித்து அடுத்த செய்தியை தெரிந்து கொள்ள முயல்வோம். இன்றைய சமூக வலைதள உலகில் முழுமையாகத் தெரிந்து கொள்வதற்கு முன்னால் வேகமாக நகர்த்தி விட்டு பற்றாக்குறை புரிதலோடு தெரிந்தது போல் பாவனை செய்ய பயிற்றுவிக்கிறது. நீண்ட நேரம் நண்பர்களிடம் வெட்டியாக விவாதிக்கிறோம்.

சமீபத்தில் நண்பர் ஒருவர் தேனீக்கள் அழிவதால் பூமியானது உணவு தேவையில் மூன்றில் ஒரு பங்கு இழக்க இருக்கிறது என்றார். தெரியாத செய்தி என்பதால் நானும் நம்பினேன். சமீபத்தில் ஆங்கில இணையவழி கட்டுரை படிக்கும் போது அதிர்ந்து போனேன். மகரந்தச் சேர்க்கையை செய்யக்கூடிய தேனீக்களின் வகை சற்று ஏறக்குறைய 20000 ஆயிரம் சிற்றினங்கள் இருக்கிறது அதில் சில 9 சிற்றினங்கள்தான் தேநீர் சேகரிக்கிறது. இது கூட நாளைக்கு மாற்றத்திற்கு உட்படலாம். இப்படி நாள்தோறும் புதுப்புது செய்திகள் இணையம் அப்டேட் செய்து கொள்கிறது. ஆனால் மனிதன் தன் அறிவை அப்டேட் செய்து கொள்வது மிக மெதுவாக இதனால் நிகழ்கால உண்மைக்கு மாறன தகவல்களே அதிகம். எல்லோராலும் அப்டேட் செய்து கொள்ள முடியாது என்ற போதும் தத்தம் துறைகளில் முன்னணி பாத்திரம் வகிக்க கூடியவர்களின் தேடுதலும் புதிய விஷயங்களை புரிந்து கொள்வதும் மிகவும் மட்டுப்பட்டு விட்டது.
சமீபமாக நான் சிறந்த ஆளுமைகள் பங்குபெறும் நற்செய்திகளுக்கு செல்கின்றேன் சுவைபட நகைச்சுவையாக வீரியம் குறையாமல் பேசுவதில் விற்பனர்கள். ஆனால் அவர்களின் தகவல் நூறு சதவீதத்தில் 15 சதவீதம் கூட தேறவில்லை. இத ஏன் இங்கு சொல்கிறேன் என்றால், சமூக ஊடகங்கள் ஜனரஞ்சக பத்திரிகைகள் பேச்சாளர்கள் காணொளி காட்சிகள் மீம்ஸ்கள் ஒரு செய்தி குறித்து முழுமையான புரிதலை உருவாக்காமல் அரைகுறை புரிதலை உருவாக்கி சமூகப் பதட்டத்தை ஏற்படுத்துகிறது.
சுற்றுச்சூழல் அச்சம் குறித்து மக்களிடம் பல்வேறு வகையான பயமும் குழப்பமும் நிலவுகிறது. ஆனால் பயமும் குழப்பமும் மேலும் சிக்கலை உருவாக்கும் ஒழிய தீர்வாக அமையாது. எனவேதான் நமது முன்னோடிகள் கவனமாக மக்களைப் பயிற்றுவிக்க வேண்டும். நான் இன்று முன்னோடிகள் என்று சொல்லுவது சமூக ஊடகங்களையே ஏனெனில் பெரும்பாலானோருக்கு சமூக ஊடகங்களால் பயிற்றுவிக்கப்படுகிறது. ஒவ்வொருத்தரும் பணியாற்றும் துறை சார்ந்து அத்தனை காணொளி காட்சிகள் இணையத்தில் கொட்டி கிடக்கிறது. தொழில்நுட்ப முதல் பிரசவம் பார்க்கும் வரை அவ்வளவு. வருமானம் கொலிக்கும் தொழிலாகவும் இருக்கிறது. சில பிரபலமான சமுகவலைதள முகவர்கள் குறிப்பிட்ட சாராரை தவறாக பயிற்றுவிப்பது கூட நடக்கிறது.

இந்தச் சூழலில் தான் சுற்றுச்சூழல் குறித்து மக்களிடம் பயத்தையும் குழப்பத்தையும் போக்கி, பின்பற்றக்கூடிய தெளிவும் தீர்வும் அவசியமாகிறது. இன்றைய நவீன யுகத்தில் பல்வேறு சொல்லாடல்கள் புரியாத குழப்பங்களை ஏற்படுத்தி மக்களை அதிலிருந்து விலக்கி வைத்திருக்கிறது. உதாரணத்திற்கு வெப்பமாதல், பருவநிலை மாற்றம், பசுமை இல்ல விளைவு , இதோடு புராண காலத்து கதைகள் வேறு இதோடு முன்னோர்கள் ஒன்று முட்டாள்கள் இல்லை என்ற புதுவகை அறிவியல் வியாக்கியானங்கள் வேறு. இப்படி பல செய்திகள் அறைகுறையாக கவனிப்பதால் முழுமை பெறாக குறை ஞானத்தை கொண்டு எல்லாவற்றிர்க்கும் கருத்து சொல்வது கடைபிடிப்பது என பித்துக்குளி நிலையில் மானிட ஞானம். தனி நபர்களின் காணோலிகள் பிரபலமாக. அரசின் அறிவியல் வகைப்பட்ட செய்திகள் சுவரஸ்மின்றி கிடப்பில்.
எரிகிற கொள்ளியில் எந்த கொள்ளின் நல்ல கொள்ளி என்று பார்த்துக் கொண்டிருக்கிறது.
இந்தியாவின் தலைநகரம் டெல்லி என்று தெரிந்து கொள்வதை பொது அறிவு என புரிந்து வைத்திருக்கின்றோம். உண்மையில் சாலை ஓரங்களில் வாகனங்களை நிறுத்துவது, மனித ஆற்றலால் செய்யக்கூடிய நடை, சைக்கிள்களுக்கு கனரா வாகனங்கள் வழி விடுவது. உழைத்து ஓய்ந்தவர்களுக்கு வரிசையில் முன்னுரிமை கொடுப்பது. தூரத்திலிருந்து வருவதற்கு அருகே உள்ளவர்கள் வாய்ப்பு அளிப்பது. பொது இடத்தில் குப்பை கொட்டாமல் தரம் பிரித்து வழங்குவது. பொது இடங்களை ஆக்கிரமிக்காமல் எல்லோரும் பயன்படுத்த அனுமதிப்பது என பல பொதுபுத்திக்கு துரோகம் செய்துவிட்டு உலோகம் அழிந்துவிடும் என அங்கலாய்ப்பது இப்போ அதிகரித்திருக்கிறது. சமீபத்தில் நாய்கள் மனிதர்களுக்கு இடையான மோதல்கள் அதிகமாக கவனிக்கிறோம். காரணம் என்ன? குடிநீர் பற்றாக்குறையை அதிகம் உணர்கிறோம். அக்னி நட்சத்திரம் போன்ற புராண காலத்து கால கணக்கு காலாவதியாகி அடை மழை பெய்கிறது. இப்படி இன்னும் பல பழைய கணக்கீடுகளை மூளையில் வைத்திருக்கிறோம். அவைகள் மாறி வருகிறது. புதிய மாற்றங்கள் புரிந்தாலும் பழைய பல்லவியை விடுவாதோடு இல்லாமல். போதிக்கவும் செய்கின்றோம். சுழலியல் செய்தி என்றால் அபசகுணம் செய்திகளே அதிகம் அதை கவணிக்க வேண்டுமா? என்றார் நண்பர். அது குறித்தான செய்திகளின் ஆர்வம் காட்டாமல் கேளிக்கை நிகழ்ச்சிகளை அதிகம் உடகங்கள் ஊட்டுகின்றன. நாமை அறியாமல் ஊடாடுகிறோம்

பிளாஸ்டிக் கழிவுகள் ஆபத்து என்று உணர்ந்தாலும் பொதுக் குளத்தில் குளிக்கும்போது குளிர்ச்சியின் சிறுநீர் கழித்து விடுவதால் அசுத்தமாகாது. பொது புத்தியில் இயங்கும் சமூகத்தை, சூழலில் கேடுகளிலும் இதே மாதிரி அனுகுகிறோம். படிப்பது ராமாயணம் இடிப்பது பெருமாள் கோயில் என்பார்கள் அதுபோல் அரசை வழிநடத்துபவர்களும் நீண்ட நாள் தீர்வுகளுக்கு மதிப்பளிக்காது உடனடி வாக்கு வங்கி அரசியலுக்காக காய் நகர்த்தலில் ஈடுபடுவதால் நமது சந்ததிகளின் எதிர் காலம் கேள்விக்குறியாக. நம் அறிவுக்கு எது சரி என்று பட்டதோ அதை கடைபிடிக்காமல், வாய்ச்சவடால் அடிப்பது நடைமுறையில் அந்த தப்பை துணிந்து செய்வதே இந்திய சமூகத்தின் உளவியலாக இருக்கிறது. இதை சமூக துரோகம் என்று வர்ணிக்க வேண்டும்.

சமூக துரோகம் கொஞ்சம் கொஞ்சமாக தனி மனிதனை பாதிக்கும். தெரியாதது போல் கடந்து விட முடியாது. நம் அறிந்த சில உயர் பொறுப்புகளில் பொருத்தமில்லாத நபர்கள் பதவியில் இருக்கும் போது அந்த துறை எவ்வளவு சீரழிவாக கெட்டுப் போய் விடுகிறது என்பது பல உதாரணங்கள் நம்மால் சொல்லிவிட முடியும். அப்படித்தான் நாமும் நமது அறிவுக்கு எதிரான சமூக துரோகங்களை செய்யும் போது திரும்ப முடியாத பாதிப்பை ஏற்படுத்துகிறது.

பல செய்திகளை படிக்கிறோம் உள்வாங்குகிறோம் அதன் வழி நடக்க முடியாத அளவுக்கு அவை அரைகுறையாகவோ கடைபிடிக்க முடியாததாக இருக்கின்றன. இதற்கெல்லாம் தீர்வு துள்ளியமான செய்திகளை தேடுவது புதுப்பிப்பது அவசியமாகிறது. இன்றைய இணையவழி அல்காரிதங்கள் மேலோட்டமான விளம்பர பெறுமதி உள்ள செய்திகளையே அதிகம் நம் கவனத்திற்கு கொண்டு வருகிறது. அந்த அரைகுறை அறிவை வைத்துக் கொண்டு மேலும் சுற்றுச்சூழல் சிக்கலை அதிகப்படுத்துகிறோம். உதாரணத்திற்கு வீட்டிலிருந்து ஒரு லிட்டர் தண்ணீரில் தூக்கில் எடுத்துச் சென்றால் ஒரு லிட்டர் தண்ணீர் தான் செலவு. கடையில் 20 ரூபாய் கொடுத்து வாங்குகிறோம் என்றால் 7 லிட்டர் தண்ணீர் செலவாகிறது. ஒரு லிட்டர் தண்ணீர் குடிக்கவும், பிளாஸ்டிக் பாட்டிலை உருவாக்க 6 லிட்டர் தண்ணீர் ஏற்கனவே வீணடிக்கப்பட்டு விட்டது. நான் பி சி டி பிளாஸ்டிக் கழிவுகள் மழைக்காலங்களில் சாக்கடையை நீர்வழிப் பாதையை அடைத்து மேலும் பொது சமூகத்திற்கு குந்தகம் விளைவிக்கிறது. நாம் எரியும் ஒவ்வொன்றும் சேர்ந்து நம்மை தண்டிக்கிறது. இப்படி அரிசி, கோதுமை, கார், வண்டி, சிமென்ட், இறைச்சி, ஆடைகள் என பட்டியல் நீளம். இதைத்தான் நாம் மறைநீர் பொருளாதாரம் என்கிறோம். ஒரு குறிப்பிட்ட பொருள் முழு பயன்பாட்டுக்கு வருவதற்கு அதனுடைய உற்பத்தி தொடங்கி போக்குவரத்து என வாடிக்கையாளரை வந்து அடைவதற்கான நீர் செலவினங்களை பட்டியலிடுவதாகும். இணையத்தில் இது குறித்து தேடினோம் என்றால் பட்டியல் கிடைக்கும்.

சமீபத்தில் இணைய தரவை கண்டு அதிர்ச்சியுற்றேன். பூமியின் காற்று நீர் போன்ற பொருட்கள் மீண்டும் மீண்டும் புதுப்பிக்கப்படுவதால் அனைத்து உயிரினங்களும் பயன்படுத்துகின்றன. ஆனால் சமீப வருடங்களில் அது குறைந்து வருகிறது குறிப்பாக ஒரு வருடத்திற்கு பயன்படுத்த வேண்டிய தண்ணீரை 8 மாதங்களுக்குள்ளாகவே முடித்து விட்டோம். அப்படி என்றால் அதன் பொருள் நம்முடைய குழந்தைகளுடைய வளங்களை நாம் பயன்படுத்திக் கொண்டிருக்கிறோம். தங்கம், அசையும், அசையா சொத்துக்கள், பங்கு முதலீடுகள், பேங்க் பேலன்ஸ்கள், இவைகள் நமது குழந்தைகளின் எதிர்காலத்தை வாழ வைக்குமா என்றால் இல்லை. மேலும் மேலும் சீரழிக்கவே செய்யும். என்பதுதான் காலநிலை மாற்றத்தின் குறிப்பான உண்மை. இதை எந்த அளவுக்கு புரிந்து கொள்கிறோம். புரிந்து கொண்ட பிறகு அதை நடைமுறைப்படுத்த முடியுமா? என்றால் எவ்வளவு பேர் சாத்தியப்படுத்த முடியும்?. அப்படி முயற்சிக்கிறவர்களை சமூகம் கொண்டாடுமா? பாதுகாக்குமா? அவர்களுக்கு எதிர்காலம் இருக்கா? என பல கேள்விகள் இருக்கிறது.

சுற்றுப்புற சூழல் மேம்படுத்து நிகழ்வில் அரசு நிறுவனமும், மக்களின் விழிப்புணர்வும் அவசியம். இருவரும் இணைந்து பணியாற்றும் போதே சூழல் சவால்களை எதிர்கொள்ள முடியும். சுற்றுப்புற சூழல் மேம்பாடு சவாலில் கடை நிலை ஊழியர்களின் அறிவு நிலை மிக முக்கியமானது. கடந்த காலங்களில் கடைநிலை ஊழியர்கள் குறைந்தபட்ச ஞானம் கொண்டவர்களாக இருந்தால் போதும், நிர்வாகிகள் வேலை வாங்கிக் கொள்வார். ஆனால் பூமி வெப்பம் அதிகமாவதால். பருவநிலை மாற்ற எதிர்கால சவால்களுக்கு கண்டிப்பாக பெரும்பான்மை மக்கள் சூழல் அறியாமையிலிருந்து தவறான கற்பிதங்களில் இருந்து விடுபட வேண்டும். கடைநிலை ஊழியர்கள் என்ற பதமே தவறானது அடிப்படை ஊழியர்கள் என்ற பதம் சரி. அந்த வகையில் அனைத்து துறைகளிலும், அடிப்படை ஊழியர்கள் சுற்றுச்சூழல் குறித்த புரிதலை பெறுவது, ஐக்கிய பட்ட அறிவுப்பூர்வமான பணி ஒத்துழைப்பால் சூழல் சவால்களை எதிர்கொள்ள முடியும். குறிப்பாக நெருக்கடியை தள்ளிப் போட முடியும். இது நமது குழந்தைகளின் எதிர்கால வாழ்வோடு சம்பந்தப்பட்டது எனவே அறிவு பொதுமைப்படுத்தப்பட வேண்டும். ஆழப் படுத்தப்பட வேண்டும். அவசியத்தின் மீது கவனம் குவிக்கப்பட வேண்டும். எது சரி என்று தோன்றுகிறதோ அதை விடபிடியாக கடைபிடிப்பவர்களாக சமூகத்தின் முன்னணி பாத்திரம் வகிப்பவர்கள் செய்யும்போதே அனைவரும் பின்பற்றுவர்.
சமூகத்தின் முன்னணி பாத்திரம் வகிப்பவர்கள் திரை மறைவாக பொருளாதார பலன்களை அடைவது, அதிகாரத்தை குவிப்பது போன்ற நிகழ்ச்சி நிரலில் இருந்து வெளியேறி சமூகத்தை சுற்றுச்சூழல் கோணத்தில் அணுகும் போது மட்டுமே எல்லோருடைய குழந்தையும், உலகத்தின் பல் உயிர் சூழலும் பாதுகாக்கப்படும்.

சுற்றுச்சூழல் நெருக்கடிகளை எதிர்கொள்வதற்கு நமது பழைய உலகம் தழுவிய பார்வையை புதுப்பித்தாக வேண்டும் புதிய பார்வையை காரா கடைப்பிடித்தாக வேண்டும் இல்லை என்றால்... இந்தக் கட்டுரையும் ஒரு வாய் சௌடாலே...

இக்கட்டுரையில் அதிகம் பதில் சொல்லப்படவில்லை. ஏனெனில் பதில்கள் இணையத்தில் விரவி கிடக்கின்றன. நம்மை கேள்வி கேட்க அனுமதிப்பதில்லை இணையம். என்ன மாதிரி கேள்விகள் சமூகத்துக்கு தேவை என்பதை நாம் பயில வேண்டியிருக்கிறது. நமது கேள்வி அறிவே சமூகத்தையும், நம்மையும் வழிநடத்த உதவும். எனவேதான் கூர்மையான கேள்விகளை உருவாக்குவதன் மூலம், சமூக வலைத்தளத்தை சீராக பயன்படுத்துவதும் எதிர்காலத்தில் சுற்றுச்சூழலை திறம்பட எதிர்கொள்ளவும் உதவும்.

இத்தனை நெருக்கடிகளுக்கு இடையே இந்த கட்டுரை எழுத வேண்டிய அவசியம் என்னவென்றால் சுற்றுச்சூழல் பாதுகாப்பு என்பது நம்முடைய பழைய கல மதிப்பீடுகளை, சொத்து குவிக்கும் பண்பாட்டு மதிப்பீடுகளை மாற்றிக் கொள்ளாத வரை அவை நம்மை தாண்டிய நமது குழந்தைகளுக்கு சீர்கேடுகளாகவே அமையும் என்பது திண்ணம்.

- பாலச்சந்திரன் (ottadai@gmail.com)
அகில இந்திய சமாதான ஒமைப்பாட்டு கழகம்(AIPSO). (தேசிய நிர்வாகக் குழு உறுப்பினர்)

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பேரழிவின் வாருங்காலம்

அன்னவாசல் தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்ற மகளிர் தின மரநடும் விழா மற்றும் கவிஞர் செங்கை தீபிகாவின் பறக்க தயங்கும் பட்டாம்பூச்சி நூல் வெளியீடு...

அம்பேத்கர் ஆக்கங்கள் மக்கள் பதிப்பு அறிமுகம்