நாமக்கல் பண்பாடு...
இதே போக்கை நாம் அனுமதித்தோம் என்றால் வேறொரு பரிணாமத்தில் சமூக சீர்கேடாக மாறி போகும். அந்த வகையில் தமிழக அரசு இதன் மீது கவனம் வைத்தது, கட்டுக்குள் வைத்திருப்பது குறிப்பாக சட்ட ஒழுங்கை முறைப்படுத்துவது வரவேற்கத்தக்கது. ஆனால் இதை மாணவர்கள் புரிந்து கொள்வார்களா பொறுப்புடன் நடந்து கொள்வார்களா என்றால் கேள்விதான். மாணவர்களே வருங்கால சமூகத்தை கட்டமைக்கக் கூடியவர்கள். ஒரு நள்ஆனே என்று விட்டுவிட்டால், ஒவ்வொரு நாளும் கும்பல் மனோபாவம் சமூகத்தின் இயல்பை பதட்டத்த்துடனைய வைத்திருக்கும்.
முன்னெல்லாம் ஒரே கல்லூரியில் இரண்டு வகுப்பு மாணவர்களுக்குள், பிறகு தனியார் அரசு கல்லூரி மாணவர்களுக்குள் திரை மறைவாக அடிதடி உண்டு. ஆனால் இப்போது மக்களும் காவல்துறையும் இருக்கு பொதுவெளியில் "கெத்து" சண்டை அதிகரிக்கிறது. திரை மறைவாக இருந்த சாதி கயிறு அரிசி வரும் நேரத்தில் வேறொரு ரூபத்தில் மாணவர்களின் பாசிச பாங்கு வெளிப்படுகிறது.
ஒரு ஊரின் பெயரையே பயன்படுத்துவது எனக்கு கூச்சம் என்றாலும், எல்லோருக்கும் புரிய வேண்டும் என்பதற்காக நாமக்கல்லை பயன்படுத்துகிறேன். தனியார் பள்ளிக்கூடங்களின் அன்றைய போக்கு இன்றைய சமூக முழுவதும் பரவி இருக்கும் சீழாக மாறி உள்ளது. இதே மாணவர்களைக் கொண்டு சமூகத்தை சீர் செய்யும் இயக்கங்களாக மாற்ற முடியும் என்கின்ற நேர்மறை கருத்தாக்கம் இருந்தாலும். ஆட்சியாளர்களும் அக்கறை கொண்ட ஆசிரியர் பெருமக்களும் இதுகுறித்து பொறுப்புடன் புதிய திட்டங்களை வகுக்க வில்லை என்றால் எதிர்கால சந்ததி சீரழிவை நோக்கி நகர்வதை நம்மால் தடுத்து நிறுத்த முடியாது.
இங்கு மாணவர்கள் குற்றவாளிகள் அல்ல அவர்களை வழிநடத்துபவர்கள் தான் அவர்களுக்கான சீரிய திட்டங்களை வகுத்து புதிய இலக்கு நோக்கி சிந்திக்க செய்ய வேண்டும். மாணவர்களை குற்றவாளியாக்குவது பொருத்தமற்ற தப்பித்துக் கொள்ளும் போக்கு. ஆட்சியாளர்கள் மாணவர்கள் பெற்றோர்கள் சமூகத்தின் முன்னணி பிரிவினர் இதன் மீது மிகுந்த கவலையோடு அக்கறை செலுத்தவில்லை என்றால்... படிநிலைப் பண்பாட்டால் பிரிந்து கிடக்கக்கூடிய சமூகத்தின் மாணவர்கள் மேலும் தங்களுக்குள் ஜனநாயகத்திற்கு விரோதமான சிந்தனைப்போக்குடன் வளர்ந்து பாசிச பண்பு நிறைந்தவர்களாக தங்களுக்குள் சண்டை போட்டுக் கொண்டு சமூகத்தை மேலும் பின்னோக்கி இழுத்துச் செல்வர். அன்பு கூர்ந்து இதை அக்கறையோடு கவனிக்க வேண்டும்.
செய்தியாக கடந்து விடாது, கவலையோடு அடுத்த கட்ட நகர்வை நோக்கி ஆசிரியர்களும் ஆட்சியாளர்களும் நகர வேண்டும். இல்லையென்றால் எல்லோர் குழந்தையும் இந்த பாலும் கிணற்றுக்குள் குளிக்க பழக்கப்பட்டு விடும். கடந்து போக பழக்கப்பட்டோம் என்றால். எதிர்கால மன்னர்கள் ரோம் நகரத்து நியூரோவாகவே உருவாக்குவார்.
கருத்துகள்