இடுகைகள்

பிரான்மலை லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

பறம்புமலை - பிரான்மலை - கொடுங்குன்றிஸ்வரர்

படம்
சங்க இலக்கியங்களில் பறம்புமலை   கபிலர் முல்லைக்கு தேர் கொடுத்த வேள்பாரி ஆட்சி செய்த பழைய மலைப்பகுதியில் எனது ஐந்தாவது கவிதை தொகுப்பு முப்பரிமாண புழுக்கம் வெளியீட்டு நிகழ்வு சிறப்புற நடைபெற்றது. மேற்கண்ட நூலினை தோழர்கள் முன்னிலையில், சிங்கப்பூர் பொழில் பண்பலை ஐயா கிருஷ்ணமூர்த்தி அவர்கள் வெளியிட்டார். மலையின் மேல் வெளியிடுவதாக திட்டம், பலருக்கும் ஏறுவதில் சிரமம் என்பதால் கீழே இருக்கக்கூடிய வைதீக தளமான, கொடுங்குன்றீஸ்வர் ஆலயத்தில் வெளியிடப்பட்டது.  கீழிருந்து 3.15 மணி நேர பயணம். பறம்புமலை உச்சியை அடையலாம். நடப்பு வழக்கில் பிரான்மலை எனவே அழைக்கப்படுகிறது. சங்க இலக்கியங்கள் தரவுப்படி கடினமான முயற்சியுடன் மலையின் உச்சிக்கு செல்ல முடியும். அன்றைய காலத்தில் வழித்தடமோ, எல்லோரும் பயன்படுத்தும் படியோ இருப்பதற்கான வாய்ப்பு இல்லை. அதைத் தாண்டி ஒருவர் மேலே செல்வது பலரையும் காணடித்திருக்கும்.  வைதீக மரபுப்படி அங்கு இருக்கக்கூடிய இறைவனுடைய பெயர் கொடுங்குன்றீஸ்வரர். சங்க இலக்கிய வாழ்வியலுக்குப் பிறகு சமீபத்தில் ஏற்பட்ட வைதீக மரபின்படி இந்த குன்றில் ஏறுபவர்கள் சிரமப்பட வேண்ட...