எதுவும் தெரியாதது போல் கொள்கைகள் அமைதியாய்
மனிதன் தனது தவறை திருத்தும் பொருட்டு குளிர்ந்த நீரை விலாவினான்
தன்னிலை தளர்வுற்று நான்கு கண்கள் கோப்பைகளில் அளவுகளை மிகத்துல்லியமாக கவனிக்கிறது.
மது கலவையை நிர்வகிக்கும் மனிதன் கவனத்துடன் பங்கு பிரித்து வெற்றி அடைகிறார்.
நான்கு கண்களும் சமாதானத்துடன் பூரிப்படைகிறது
கூச்சல் குழப்பங்கள் நிறைந்த மது விடுதிகளில் இந்த நிகழ்வின் போது மட்டும் சுற்றுப்புறத்தில் யாருமே தென்படுவதில்லை ஏன் ?
சமமாகப் பிரித்து வெற்றியாக பலருக்கும் உப பொருட்களை வாரி வழங்குகிறார்கள்.
அவர்களால் கூடுதலாக பல போத்தல்கள் வாங்க இயலும். ஆனால் ஒவ்வொரு முறையும் சமமாக பிரித்துக் கொள்ளும் துல்லியம் வெற்றியடையும் போது. மிக உன்னத மே..
ஆனந்தம்
கோப்பைக்குள் சோசலிசமாக வெற்றியடைகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக