2 செப்., 2022

தேவதையின் ஒப்பனை

அறிவு தூரிகை கொண்டு நிதானத்தை சொரிந்தேன் சுகமாகவே இருக்கிறது.  வேறொருவர் பாராட்டி சொரியும் போது இன்னும் சுகமாக
நம்மை அடுத்தவர் பாராட்டி சொறிவது இருக்கே ? பேதமையின் போதை.
அறிவு
இடுக்கின் வழியே இருட்டை திருடும் ஒளியும் ஒலி
தனிமனித இறுக்கத்தை தளர்த்தும் அகங்காரம் அறிவு
அனாமதேய கனவின் மீது எழுத்துக்களின் சுவிகரிப்பு கவிதை
கவிதை வார்த்தைகளில் சில கூட்டு புள்ளிகள் பொருந்தாது ஆனால் அழகியல் ததும்பும் கவிதை வாழ்க்கை கணக்கோடு ஒத்துப் போவதே இல்லை வித்தைக்காரனை கண்டு ஏமாறுவதை போல்...
செல்லாத நோட்டுகளை ஏமார்ந்து வாங்காத எளிய மக்கள் கடந்து போகிறார்கள் சில அறிவு செறுக்காளர்கள் ஏமாறுவது போல் நடிப்போம்.
சுண்டலும் ஆறிப்போன தடித்த தேனீர், வாயைக் கெடுத்து விடைபெற்றது.
சொல் பேச்சு கேட்காத பிள்ளைகள் பெற்ற விமர்சகரின் இலக்கணப்பிழை அங்கலாய்ப்பை 
ஒப்பீட்டு நகைக்கிறேன்.
கவிதைகள் என்று சொல்லப்படுபவைகளில் பொருள் பொதிந்த வார்த்தைகள் பினமாக அணிவகுப்பு
என்ன கொடுமை சரவணனா ?
வார்த்தைகளை உயிர்புடனே அடுக்கினேன். ஆனால்
பினங்களாகவே வாசிக்கிறோம். 
ஆம் தேவதைகளின் நாக்கு நமக்கு தெரிவதில்லை.

கருத்துகள் இல்லை: