திருவரங்குளம் ஆசிரியராக போய், மாணவராக...
இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் நூற்றாண்டு விளக்கப் பேரவை - திருவரங்குளம் ஒன்றியம் புதுக்கோட்டையில் ஆசிரியராகவும... மாலையில் கொத்தமங்கலம் கலை இலக்கிய பெரும் அனறு கிளை கூடலும் நூற்றாண்டில் கடந்த கால வரலாற்றை அர்ப்பணிப்பு உணர்வை அறிந்து கொள்ளும் வாய்ப்பாக...
பயிற்சி தரும் ஆசிரியராக முன்னோடி தோழர்களின் கடந்த கால அனுபவங்களை அறிந்து வந்தது வாத்தியார போய் மாணவராக திரும்பியது தான் சிறப்பு.
1.நில உச்சவரம்பு
2. நிலமிச்சிப் போராட்டத்தில் பங்கெடுத்த தோழர்கள் என்ன பேசுகிறேன் என்று அமைதியாக கேட்டுக் கொண்டிருக்கிறார்கள். 13000 பேர் கைதாகி மூன்று மாதங்களுக்கு மேலாக சிறையில் இருந்தது.
குளிப்பதற்காக மாற்று உடை (துண்டு) அருணா கயிறும் ஒருவர் இன்னும் நினைவாக வைத்திருக்கிறார்.
இன்னொருவர் ஜெயிலில் இருக்க வேண்டும் என்பதற்காக 21 பேருடன் AIYF மறியல் செய்து ஜெயிலுக்கு போய்விட்டு வந்திருக்கிறார்.
ஒரு நாள் அடையாள அரஸ்டில் 6:30 மணிக்கு மேல் ஆகிவிட்டாலே பதட்டப்படும் நான் எல்லாம் எம்மாத்திரம்.
கட்சி தடை காலத்தில் பாதுகாப்பளித்த காடுகள், தமிழ் மனம் மாறாத ஊர் பெயர், கண்மாய்கள் பெயர், கடவுளின் பெயர் என்ன தமிழ் அவ்வளோ அழகாக கொட்டி கிடக்கிறது. தோழர்கள் அர்ப்பணித்துவிட்டு சாதாரணமாக பொதுவுடமை இயக்கத்தை இவ்வளவு தூரம் சுமந்து வந்திருக்கிறார்கள். இந்தியா முழுவதும் இப்படித்தான். காலை முதல் மாலை வரை அவர்களுடன் அலாவுலாவியது அவ்வளவு தகவல்கள். உண்மையான பொதுவுடைமை நூற்றாண்டின் பொருளை பழைய நினைவுகள் உடன் சிறப்பு அமைந்தது. எதிர்பாராத நல் வாய்ப்பு.
இளமை குன்றிய தனது இயக்கம் குறித்து சோர்வாக இருந்தாலும், அவர்களுக்கு நம்பிக்கை அளிக்கும் விதமாகவும், எதிர்கால கட்சியின் தேவையும் குறித்து என் அளவில் விளக்க முயற்சித்திருக்கிறேன். ஆனால் நான் மாணவனாக மாறிதே சிறப்பு. நன்றி தோழர்களே.
அப்பளுக்கில்லாத அவர்கள் பக்குவத்திற்கு நேர்மையுடனும், அர்ப்பணிப்புடன் அடுத்தவருக்கு வழிவிட்டு காத்திருக்கும் தோழமை பாங்கு அருகி வரும் இந்த நேரத்தில், மதிப்புமிக்க மாணிக்கங்கள் அவர்கள். புதிய தலைமுறையினருக்கு அருகி வருகிறது அர்ப்பணிப்பு உணர்வு, என்ற போதிலும் முன்னோடி தோழர்கள் உழைப்பு நம்மை பிரமிக்க செய்கிறது. பல அனுபவங்கள் பல கலந்துரையாடல். வட்டார வளர்ச்சி அதிகாரியாக பணியாற்றிய ஒருவர் தனது வாழும் பகுதிகளுக்கு உட்பட்டு சாத்திப்பாடு உடைய மக்கள் பணிகளை தொடர்ந்து அழுத்தம் கொடுப்பது அவர் ஒன்றியத்துக்கு உட்பட்ட தோழர்களின் வரலாறை தொகுப்பதும் சிறப்பு. கூடவே தமிழக அரசின் நல்லாசிரியர் விருது பெற்ற ஒருவர் தொடர்ந்து கட்சி வகுப்பை விடிய கமர்சியல் நூற்றாண்டு வரலாற்றை அறிமுகப்படுத்துவது ஆர்வமூட்டும் ஆசிரியர் பணியை செய்வதும் ஆச்சரியம். ( இன்றைய நல்லாசிரியர் விருதுகள் பெரும்பாலும் விலைக்கே...)
எப்போதுமே ஒரு நிகழ்ச்சி தொடங்குவதற்கு முன்பும், நிறைவுற்ற பின்பும் சக தோழர்களோடு கலந்துரையாடும் நிகழ்வே நீங்காத நல்ல அனுபவமாக நிறைந்துவிடும். அப்படி தான் நேற்றைய பொழுது துவங்குவதற்கு முன்பும், உணவு இடைவேளையின் போதும், கூட்டம் முடிந்த பிறகும் அற்புதமான அனுபவங்கள்.
கருத்துகள்