அன்பின் வழியது... நூல் அறிமுகம்


அன்பின் வழியது... நாவல் 
சசிகலா தளபதி விஜயராஜா 
நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் வெளியீடு 
288 பக்கம் ₹230 
2025 முதல் பதிப்பு

கொங்கு மண் சார்ந்த விவசாய குடும்பத்தின் வாழ்வியல், சடங்கு, சாதிய சிந்தனை, ஆணாதிக்கம் உறவுகளுக்குள்ளான மனத்தாங்கல், மூடநம்பிக்கைகள், தற்கொலை பங்கு, குடி கலாச்சார குறிப்பாக அரசு மருத்துவமனையில் சாமானியன் சந்திக்கும் இடர்பாடுகள், மக்கள் தொகை பெருக்கத்தின் விளைவாக நிலங்கள் மீதான பிடிப்பு, நகரமயத்தில் கரைந்த உறவினர்களின் பழைய விழுமியங்கள் மீதான நோக்கு நிலை, அன்றாடம் தமது வீடுகளில் நடைபெறும் துரோகம், கயமை, பழிவாங்கும் உணர்ச்சி அதே நேரத்தில் யாரோ ஒருவரின் அன்பு, அரவணைப்பு, வழிகாட்டுதல் என கதாபாத்திரங்களும் அதன் வழி உரையாடல்களும் சிறப்பு.

எதிர் கதையாடலை குறைத்து நேர்மறையான கதாபாத்திரகளின் எழுத்தாளரின் சமூக பொறுப்பு நிறைந்த களம் மதிப்புமிக்க ஒன்று. ஆனந்தன் என்ற கதாபாத்திரத்தில் பொறுப்புணர்வு, நிதானம் தன் சார்ந்த உறவினர்களிடம் மேன்மையுரும் போக்கை முதன்மை கதையும் மாந்தராக தேர்வு அருமை. இப்படி பல்வேறு கதாபாத்திரங்கள் மிகைப்படுத்தாமல் சமூகத்தில் உலவும் சந்தித்த மனிதர்களின் உணர்வை காட்சிப்படுத்தியுள்ளார். இதற்கு தீர்வாக அன்பும், பொறுப்புணர்வும், நிதானமும் தேவை என்பதை முன்னிறுத்துகின்றது நாவல். 
இளம் தலைமுறையினர் வாசிப்பதன் மூலம் சமூகத்தில், உறவுகளில் தன்னை எந்த இடத்தில் பொருத்திக் கொள்ள வேண்டும் என்ற சிந்தனையை தூண்டக்கூடிய நாவலாக இருக்கிறது. திரைக்கதை பாணியில் அமைந்த புதினம்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பேரழிவின் வாருங்காலம்

அம்பேத்கர் ஆக்கங்கள் மக்கள் பதிப்பு அறிமுகம்

அன்னவாசல் தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்ற மகளிர் தின மரநடும் விழா மற்றும் கவிஞர் செங்கை தீபிகாவின் பறக்க தயங்கும் பட்டாம்பூச்சி நூல் வெளியீடு...