தோழர் ஆய்வாளர் பன்முகப் பரிமாணம் கொண்ட முனைவர் கனிமொழி செல்லத்துரை அவர்கள் ஆய்வுபுலத்தில் இருந்து புனைவு படைப்பிலக்கியத்தை நோக்கி நகர்ந்திருக்கிறார். அவரின் முதல் நாவல் கீழத் தஞ்சையின் விவசாயப் பின்புலத்திலிருந்து கிராமப்புற பாகுபாடு உளவிலில் மையம் கொண்டுள்ள சமூக பொருளாதார பண்பாட்டுச் சூழலை, அதன்வழி உழைக்கும் மக்களின் பாடுகளை அகப்புற நெருக்கடிகளில் குடும்ப உறவுகளில் ஊடாட்டங்களை வட்டார வழக்கு சொற்களை கொண்டு தொடர்ச்சி மாறாது கனம் குறையாது பதிவு செய்கிறார். எனது பெற்றோர் மற்றும் உறவினர்களுக்கு நன்னிலம் பக்கம் என்பதால் மிக நெருக்கமான வட்டார வழக்குச் சொற்கள் இருப்பதில் வியப்பில்லை. சொற்களுக்காகவே திரும்பத் திரும்ப படிப்பேன் என நினைக்கிறேன். முருகையன் என்ற கதாபாத்திரம் தோழர் முருகையனை நினைவுபடுத்துவதாக இருக்கிறது. கதையின் பாத்திரங்களில் நேர் எதிர் பிம்பங்கள் இல்லை சமூகத்தின் பண்பாட்டுச் சிக்கலை விவரனை செய்யும் பாத்திரப் படைப்புகளாக உள்ளன. எழுத்தாளரின் இந்த கதை மாந்தர் தேர்வு சமூக அக்கறையை வெளிப்படுத்துவதாக இருக்கிறது. அவரின் இனிவரும் எழுத்துக்கள் சமூக நீதியை வலியுறுத்த...
தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்றம் அறந்தாங்கி கிளை மற்றும் பாரதி முற்றம் இணைந்து ஏற்பாடு செய்த நூல் வெளியீடு, இலக்கிய சந்திப்பு அறந்தாங்கி எல்.என்., புரத்தில் மாவட்ட மதிப்புரு தலைவரும் பாரதிமுற்ற நிறுவன தலைவரும் கவிஞர் தோழர் அஜய்குமார் கோஷ் சீரிய ஏற்பாட்டில் குழந்தைகளின் பாடலோடு தொடங்கியது. நகரத் தலைவர் இலக்கிய ரவிச்சந்திரன் அவர்கள் வரவேற்புரை கவிதை வாசித்திட, தமிழக அரசின் நல்லாசிரியர் விருது பெற்ற இருவரை கௌரவித்தல், சிறந்த ஆசிரியர்கள் பணியாளர்கள் அறிமுகம், கருத்துரைகள் என நடைபெற்றது. முனைவர் சிவகவி காளிதாஸ் அவர்களின் மேழி மற்றும் பறை = அறிவித்தல் நூல்களை மாவட்டச் செயலாளர்கள் ஒட்டடை பாலச்சந்திரன் அறிமுகம் செய்திட, நல்லாசிரியர் மு சிவானந்தம் அவர்கள் வெளியிட, முதல் பிரதிகளை ஓய்வு பெற்ற மாவட்ட கல்வி அதிகாரி சாமி சத்தியமூர்த்தி அவர்கள் பெற்றுக்கொண்டு விழா பேருரை ஆற்றி நிறைவு செய்தார்கள். நன்றியுரை அறந்தாங்கி நகர செயலாளர் சிவா அவர்கள். பிறகு உணவோடு நிறைவுற்றது
அன்பின் வழியது ... நாவல் சசிகலா தளபதி விஜயராஜா நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் வெளியீடு 288 பக்கம் ₹230 2025 முதல் பதிப்பு கொங்கு மண் சார்ந்த விவசாய குடும்பத்தின் வாழ்வியல், சடங்கு, சாதிய சிந்தனை, ஆணாதிக்கம் உறவுகளுக்குள்ளான மனத்தாங்கல், மூடநம்பிக்கைகள், தற்கொலை பங்கு, குடி கலாச்சார குறிப்பாக அரசு மருத்துவமனையில் சாமானியன் சந்திக்கும் இடர்பாடுகள், மக்கள் தொகை பெருக்கத்தின் விளைவாக நிலங்கள் மீதான பிடிப்பு, நகரமயத்தில் கரைந்த உறவினர்களின் பழைய விழுமியங்கள் மீதான நோக்கு நிலை, அன்றாடம் தமது வீடுகளில் நடைபெறும் துரோகம், கயமை, பழிவாங்கும் உணர்ச்சி அதே நேரத்தில் யாரோ ஒருவரின் அன்பு, அரவணைப்பு, வழிகாட்டுதல் என கதாபாத்திரங்களும் அதன் வழி உரையாடல்களும் சிறப்பு. எதிர் கதையாடலை குறைத்து நேர்மறையான கதாபாத்திரகளின் எழுத்தாளரின் சமூக பொறுப்பு நிறைந்த களம் மதிப்புமிக்க ஒன்று. ஆனந்தன் என்ற கதாபாத்திரத்தில் பொறுப்புணர்வு, நிதானம் தன் சார்ந்த உறவினர்களிடம் மேன்மையுரும் போக்கை முதன்மை கதையும் மாந்தராக தேர்வு அருமை. இப்படி பல்வேறு கதாபாத்திரங்கள் மிகைப்படுத்தாமல் சமூகத்தில் உலவு...
கருத்துகள்