த.க.இ.பெ. விரிவடைந்த மாநில செயற்குழுக் கூட்டம் - திருப்பூர்






தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்ற மாவட்ட செயலாளர்கள் கலந்து கொண்ட விரிவடைந்த மாநில செயற்குழுக் கூட்டம் திருப்பூரில் மாநிலத் தலைவர் தோழர் கங்கா தலைமையில் துவங்கியது. திருச்சி பாரதி கலைக்குழுவின் மக்கள் பாடகர் தோழர் லெனின் உள்ளிட்ட ஆளுமைகளுக்கு அஞ்சலியுடன்,  பொதுச்செயலாளர் தோழர் அறம் வேலையறிக்கை வைத்து எதிர்கால திட்டத்தை வைத்தார். திருப்பூர் நாடாளுமன்ற உறுப்பினர் தோழர் சுப்புராயன் வாழ்த்துரை, சந்தா, கோவையில் நாடக பயிலரங்கம், புதுக்கோட்டையில் சிறுகதை பயிலரங்கம் மற்றும் 'ரீல்ஸ்' உள்ளிட்ட குறும்பட இயக்கம் குறித்த பயிலரங்கம் திண்டுக்கல்லில் நடத்துவதென முடிவு செய்யப்பட்டது.
மாநில துணைச் செயலாளர் தோழர் சசிகலா மாவட்ட தலைவர் தோழர் நடராஜன் மாவட்டச் செயலாளர் ஆகியோரின் சீரிய ஏற்பாட்டில் முக்கிய தீர்மானங்கள் முன்மொழியப்பட்டன.

1. ஆளும் அரசின் பண்பாட்டு சீரழிவை துணிவுடன் எதிர்த்தது பள்ளி கல்லூரி வளாகங்களை லாவகமாக பயன்படுத்துவது. 

2. திருவள்ளுவர் சிலை அமைத்த 25 ஆண்டு விழா, பாரதிதாசன் விழா மற்றும் மாநில தலைநகரில் காரல்மாக்ஸ் சிலை அமைப்பு தமிழக அரசுக்கு நன்றி 

3. பேராசிரியர்களுக்கு நிலுவையில் உள்ள பணப் பயன்களை வழங்க கோரி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 

மாநில செயற்குழு கூட்டம் நடவடிக்கைகள் ஜனநாயகமாக பொறுப்புணர்வுடன் பொறுமையுடன் வழிகாட்டுதல் அதன் வழி வழிநடத்தும் ஜனநாயக நிகழ்ச்சி போக்கு... மரணம் வரை கற்றுக் கொள்ள, செழுமைபட ஏதோ இருந்துகொண்டே. ஆரவாரம் இல்லாத அளவுக்குள் அடங்கிய கூட்டப் பொருண்மை. பொறுப்புணர்வு மாவட்டச் செயலாளர் ஆகிய எனக்கு உழைப்பின் மீதான அங்கீகாரம் கௌரவம் ஆகிறது. திருப்தியான தருணம். மாநில துணைத் தலைவர் தோழர் டி எஸ் நடராஜன் அவர்கள் முதிர்ந்த ஆளுமை. ஆனபோதும், இளையோர்களை ஊக்குவிக்கும் பாங்கு மதிப்புக்குரியது. கரிசனம் மிக்க வார்த்தை துடுக்காக கொட்டிவிட காரசாரமான வார்த்தை மெதுவாக அமைதியாகிறது. அமைப்பின் அக்கறை நிமித்தம் அது. பாசிசத்தை முறியடிக்க நமது முன்னோடிகள் மெனக்கடல் நம்மை என்னவோ செய்கிறது. நவ பாசிசத்தை எதிர்த்து எதையாவது செய்தே ஆக வேண்டும். நமது சந்ததிகளுக்காக... பொறுமை  நிறைந்திருந்த பொறுப்புணர்வு மிக்க இளைய சமுதாயத்தின் மீதான அக்கரை அறிவை உரசி போகிறது என்றால் மிகையாகாது. கூட்ட நடவடிக்கையில் எல்லா சுவாரஸ்ய போக்கு உண்டு என்றாலும், களப் பணியாற்றுபவர்கள் அமைதியாக விட்டுக் கொடுப்பதும், சிலர் கூட்டப் பொறுண்மைக்கு பொருந்தாமல் நீட்டி முலக்குவதுமாக... எல்லாம் தான் இருந்தது. இந்த முறையும் திருப்பூர் மாறி இருக்கிறது. திருச்சி கரூர் திருப்பூர் தேசிய நெடுஞ்சாலை வழ வழ என்று வழிக்கு கொண்டு நேரத்தை சுருக்கி இருக்கு. 
திருப்பூரில் டீ₹15. தோசை ₹20 🤔

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பேரழிவின் வாருங்காலம்

அம்பேத்கர் ஆக்கங்கள் மக்கள் பதிப்பு அறிமுகம்

அன்னவாசல் தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்ற மகளிர் தின மரநடும் விழா மற்றும் கவிஞர் செங்கை தீபிகாவின் பறக்க தயங்கும் பட்டாம்பூச்சி நூல் வெளியீடு...