சிந்து நதி மக்களுக்கானது, அரசுகளுக்கானதல்ல.
நதி மக்களுக்கானது, உணவும் குடிமக்களுக்கானது, இதுநாள் வரை (பல நூற்றாண்டுகளாக) பரிணாமடைந்த பல்லுயிர் சூழலின் ஆதாரம் சிந்து நதி. 75 ஆண்டுகளுக்கு முன்னர் ஒரே நிலப்பரப்பாக இருந்ததே. மதங்களால் தங்களுக்கிடையே நாடுகள் என்னும் பொய் கோடுகளால் சண்டையிட்டுக் கொண்டு, அறியாத உழைக்கும் மக்களை ஏமாற்றி, ஆள்பவர்களும், அதிகார உயர்குடி செல்வந்தர்கள் உலகத்தை குட்டிச்சுவராக்குகிறார்கள்.
பலரும் மரம் நடுகிறார்கள் அவைகள் வளர்வதற்குள். அந்நியக் களைச் செடிகளும், ஆயிரம் ஆயிரம் டன் வெடி மருந்துகளும் வெடிக்க காத்திருக்கின்றன. மரம் வைப்பதால் என்ன நடந்து விடப்போகிறது. அத்தனை லட்சம் மெட்ரிக் டன் கார்பன் உமிழ்வு செரிக்காமல், தானே புதுப்பித்துக் கொள்ளும் திறன் இழந்து பூமியின் சுற்றுச்சூழல் இயல்பு திரிந்து, பசுமை இல்ல விளைவின் காரணமாக வளிமண்டலத்தில் கார்பன் செரிவு இயல்பை விட அதிகரித்து, தானே புதுப்பிக்க முடியாத நிலைமைக்கு சென்று, பூமி வெப்பத்தால் தகிக்கிறது. ஆனாலும் அத்தனை அணுகுண்டுகள் வைத்திருக்கிறோம் என்று வாய் வழியா சொன்னாலும், சொல்லப்படாத அணுகுண்டுகள் திரை மறைவாய் எத்தனை என்று யாரும் அறியார். அதன் கழிவுகள் எங்கு சேமிக்கப்படுகிறது என்பது கூட ராணுவ ரகசியம் என்று மறைக்கிறார்கள்.
இந்திய ஆளும் கட்சி ராணுவம் ,மக்கள் தொகை, பெரிய நிலப்பரப்பாலும் தன்னை உயர்வாக கருதும் விஸ்வகுரு வகையறாக்கள். பிறரை எளிமையாக பணிய வைக்க இயலும் என்று நினைப்புடன், நீரை நிறுத்துவதால் தானை ராஜதந்திரியாக. உலகுக்கு பறைசாற்ற விரும்புகிறார். கடந்த காலங்களில் இருந்த செல்வாக்கு சரியத் தொடங்கியவுடன் "அப்ராணி, சப்ராணியை" போட்டு வெளுக்க நினைக்கிறார்.
80% பாகிஸ்தான் உழைக்கும் விவசாயிகளின் ஆதாரம் சிந்து நதி. மக்கள் மட்டுமல்ல பல்லுயிர் சூழல், கால்நடைகள், மரங்கள், பழங்கள் உயிரினங்கள் என அத்தனைக்கும் ஆதாரம் அது. நதியை நிறுத்துவதால் செயற்கை பாலைவனத்தை ஏற்படுத்த நினைக்கும் விஸ்வகுரு எப்படி ராஜதந்திரியாக இருக்க முடியும்? பழிவாங்கும் எண்ணத்தோடு இருக்கும் சாதாரண மனிதன். நாலு பேர் படுகொலை செய்ததற்கு 80% மக்களை பாதிக்கச் செய்யும் மூடத்தனம் எப்படி மனித தன்மையானது? பெரும்பான்மை மனிதர்களின் தலைவனாக எப்படி இருக்க முடியும்? கொடூரனின் சிந்தனையே இப்படி சிந்திக்க சொல்லும். அவர் மட்டுமா அவர்கள் சகாக்களும் அப்படியே யோசிக்கிறார்கள், ஆளும் கட்சியாக இருப்பதால் அவர்களின் ஊதுகோலாக ஊடகங்கள் அப்படியே. மதத்துக்கு எதிராக பெரும்பான்மை தேசிய வெறியை ஊட்டி வேற்றுமையில் ஒற்றுமை என்ற அரசியல் சாசன சிந்தனைக்கு எதிரான கருத்துக்களை வேகமாக பரப்புரை செய்து, எதிர் கருத்து சொல்பவர்களை தேச விரோதிகள் என முத்திரை குத்தும் கொடூரமூம் அரங்கேறுக்கிறது.
ஆளும் அரசுகளுக்கிடையே சண்டை, எளிய விவசாய அன்றாடம் காட்சிகள் என்ன செய்வார்கள்? பல்லுயிர் சூழல் என்னவாகும்? ஏற்கனவே தெற்காசியா மத அடிப்படைவாதத்தால், பாலைவன பொருளாதாரத்தாலும் உலகோடு போட்டி போட முடியாமல் பின்னோக்கி நகர்கிறது, இருக்கும் கொஞ்ச நஞ்ச பசுமையும் உள்நாட்டு அரசியல் குழப்பங்கள், பருவநிலை மாற்றம் என வறட்சிக்கு நகர்த்தும் வல்லாதிக்க அதிகார துஷ்பிரயோகம் எப்படி சரியாக இருக்கும்?
சுற்றுலா பயணிகளை பாதுகாக்க வேண்டியது நாம் தான், மொத்த சமூகத்தில் சில அரைக் கிறுக்குகள் இருக்கத்தான் செய்வார்கள், அவர்களை களைவது சரி, அதற்காக ஒட்டுமொத்த நாட்டையும் பழி வாங்குவது ராஜதந்திரம் அல்ல. பாகிஸ்தானும் நிலையற்ற ஆட்சியால் பல்வேறு ஏற்ற இறக்கங்களை உள்நாட்டு குழப்பங்களை பொருளாதார சரிவுகளை தொடர்ந்து சந்தித்து வருகிறது. இந்தியாவுக்கு இது போன்ற பெரிய பாதிப்பு இல்லை என்றாலும், . வளர்ந்த நாடுகளோடு போட்டி போட முடியாத பாரதூரமான இடைவெளியில் சாதுரியமான சில காய் நகர்த்துகளால் முன்னேறுகிறது. இப்படி வளர்ந்து வரும் சூழலில் இரு நாடுகளுக்கும் போர் நல்ல தீர்வு அல்ல. குறிப்பாக பின்தங்கிய பொருளாதரத்தை, மத உணர்வோடு இணைத்து இருக்கும் பண்பாட்டை கொண்ட, ஒரு பிரிவினரை ஜனநாயகமாக பாதுகாக்காமல், பயிற்றுவிக்காமல், அவர்களை அப்புறப்படுத்த நினைக்கும் பெரும்பான்மை மத உளவியல் மூர்க்கத்தை, ஆளும் அரசகள் ஊக்கப்படுத்துவது சமூக பதட்டத்தையே ஏற்படுத்தும். பொறுப்புடன் அணுக வேண்டிய சூழல். ஆனால் இரு ஆளு அரசுகளும் ஜனநாயகத்தை மறுக்கும் பாசிசத்தை பின்புலமாக கொண்டவை. பாசிசம் விட்டுக் கொடுக்கவும் தயாராக இல்லை, விலகி நிற்கவும் தயாராக இல்லை, பழிவாங்கும் எண்ணத்தோடு நதியின் போக்கை தடுக்க நினைக்கிறார்கள்.
அணைக்கட்டுகள் நீண்ட நாள் நோக்கில் சூழலியல் சீர்கேடுகளையே உருவாக்குபவை. சமூக அக்கறை கொண்ட வல்லுணர்கள் சிந்து நதியை தேக்குவதற்கான எந்த கட்டுமானமும் திட்டமும் அரசிடம் இல்லை என்கின்றனர். இப்படி இருக்க, எப்படி இந்த அறிவிப்பு உடனடியாக அமலுக்கு வருகிறது? உலக வெப்பமயமாதல் அதிகரித்து வரும் சூழலில், பனிமலை உருகும் விகிதமும் அதிகரிக்கும். அது யூகித்து உணர முடியாத பெருவெள்ளத்தை ஏற்படுத்தும் என்பதில் எந்த அயமும் இல்லை. கடந்த முறை கேதர்நாத் மேக வெடிப்பு மழையால் எதிர்பாக்காத மோசமான விளைவை சந்தித்தது போல் எதுவும் இனி நடக்கலாம். அப்படி இருக்க அரசு பல்லுயிர் சூழலுக்கு எதிரான ஒரு பிரகடனத்தை அறிவிப்பது உண்மையில் அறிவியலுக்கு புறம்பானது.
உலகம் சுற்றுச்சூழல் பிரச்சனை எதிர்கொள்ள நாடுகள் தங்களுக்குள் சமாதான சகவாழ்வு, இணக்கமான பரஸ்பரம் உதவும் உறவு அவசியம். இப்படியாகத்தான் சூழலியல் சார்ந்த பிரச்சினைகளை ஒருங்கிணைந்து எதிர் கொள்ள முடியும். சூழல் சீர்கேடுகள் குறித்தான அறிவியல் தரவுகள், தினந்தோறும் நமக்கு பயம் தரும் புள்ளி விவரங்களை தந்து கொண்டே இருக்கின்றன.
ஆட்சியாளர்கள் தங்களுடைய பாதுகாப்பு தோல்வியை ஒத்துக் கொள்ளாது பிறர் மீது பழி சுமத்துவது அல்லது பலிகடா ஆக்குவது பொருத்தமற்ற செயல். குறிப்பாக ஐக்கிய நாட்டு சபையில் வீட்டோ அதிகாரத்தை பெற நினைக்கும் ஆட்சியாளர்கள், இப்படி குறுகிய எண்ணத்துடன் நடந்து கொள்வது அவர்களுக்கு உதவப் போவதில்லை. உங்கள் வல்லரசு கனவுக்கு வீட்டோ அதிகாரம் தேவை அதற்கு அக்கம்பக்கத்து நாடுகளை அரவணைத்துக் கொள்வது அவசியம்.
வைத்தியம் செய்து கொள்ள வந்தவர்களை கூட மருத்துவமனையில் இருந்து விரட்டுவது, கடித போக்குவரத்த நிறுத்துவது, விசாவை ரத்து செய்வது என பல நடவடிக்கைகள் சிறு பிள்ளைத்தனமாக இருக்கிறது. இது எந்த வகையான நியாயம்? நமது பாதுகாப்பு அவ்வளவு குறைபாடு உடையதா? நம்மை ஏமாற்றி அவர்கள் எதுவும் செய்து விடுவார்களா? அல்லது இப்படி எல்லோரையும் சந்தேகப்படுவது சரிதானா?
ஒரு கொடுங்கனவை எல்லோர் சிந்தனையிலும் தேசிய வெறியாக, திரை மறைவாக மதவெறியை உடாடி விதைக்கிறது. ஊடகங்களும் கவலை அளிக்கும் விதமாக நடந்து கொள்வது மிகுந்த ஏமாற்றம். மத்திய அரசின் ஆளுநர் ,முதல்வர்கள், அமைச்சர்கள் தொடங்கி வாட்ஸ் அப் குரூப் மெம்பர் வரை சலவை செய்யப்பட்ட தேசிய வெறியோடு ஊறி மொதுமொதுத்து துயரமாக காட்சியளிக்கிறது.
கண் முன்னே ஒரு கொடுங்கனவு பதட்டத்தை பரிசாக அளிக்கிறது. பதட்டத்தோடு வாழ பழகிக் கொண்டிருக்கிறோம். சுற்றுலா பயணிகளின் கொலையை நான் நியாயப்படுத்த விரும்பவில்லை, இன் நிகழ்வை அறிவியல் வகைப்பட்ட சிந்தனையோடு யோசித்தோம் என்றால், சிறுபான்மை மக்கள் தங்களுக்கு எல்லா வாய்ப்புகளும் அடைக்கப்படும் போது, குறுக்கு வழியை தேர்ந்தெடுப்பார்கள். கையறு நிலையில் பலர் கடந்து போகும் போது, சிலர் மோசமான முன்மாதிரிகளை கையில் எடுக்கிறார்கள். அது மொத்த சமூகத்தையும் பதட்டத்துக்கு உள்ளாக்கிடும். பன்முகத்தன்மையை அழித்து தனக்குள் குறுங்குழுவாக, எதிர்மறை சிந்தனைகளை கூறுதீட்டிக்கொண்டு ஒருவரை ஒருவர் பழி தீர்க்கும் துரோக மனப்பான்மையோடு, புது பண்பாடாக சமூக முழுவதும் வியாபித்து விடுகிறது. அங்கொன்று இங்கொன்றும் நல்லவர்களின் குரல் அங்கு நெறிக்கப்படும். நாம் புரிந்து கொண்டு அதை கட்டுக்குள் கொண்டு வரவேண்டும். சாத்தியப்படுமா தெரியவில்லை. ஆனாலும் எதார்த்தம் மோசமாகவே, மேலும் தீவிரமடைகிறது.
இமயமலையின் மக்கள் தங்களுக்குள் சண்டையிட்டு, நெடுநாள் சூழலியல் அமைதியை பதட்டத்தை நோக்கி நகர்த்துகிறார்கள். "சாகர் மாதா" என பழம் பெயரில் அழைக்கப்படும் இமைய மலையின் பிள்ளைகள் ஏன் இப்படி தங்களுக்குள் முரண்பட்டுக் சண்டையிடுகிறார்கள். அவர்கள் சண்டை இடவில்லை அரசுகள் தான்.
சாகர் மாதா பல்லாயிரம் ஆண்டுக்கு முன்னரே நம்மை பாராட்டி சீராட்டி வளர்த்த அன்னை, அவளின் பன்முகத்தன்மை சீரழித்து, நமக்கும் முரண்பட்டு மேலும் பிரிவினையால் பிரிந்து விரிந்து போகிறோமா? இமயமலையின் அமைதியை மனிதர்கள் தான் துண்டாடுகிறார்கள். இன்னும் ஸ்துலமாக சொல்வதென்றால் நாடுகள் என்று எல்லை கோடுகளை வகுத்துக் கொண்டு ஆளும் அரசுகள் மக்களை பலிகடாக்குகிறார்கள். கூடவே இமயமலையின் பல்லுயிர் சூழலும் சேர்ந்தே.
கருத்துகள்