விஜயவாடா முனைவர் அம்பேத்கர் மணி மண்டபம் ஆஹா...

விஜயவாடா முனைவர் அம்பேத்கர் அவர்களின் உயரமான சிலை அதன் ஊடே கருப்பு வெள்ளையில் பட காட்சிகளின் தொடர்ச்சி, சித்திர வேலைப்பாடுகளுடன் அவரின் வாழ்க்கை தொடர்ச்சி, அவரின் பொன்மொழிகள், இடை இடையே தொடர்ந்து ஓடிக்கொண்டிருக்கும் அங்காங்கே காணொளி காட்சிகள். மாநகர மையத்தில் அய்ம்பது ஏக்கருக்கும் குறையாக பராமரிப்பு பூங்கவுடன், கலை நேர்த்தியான அமைப்பு அடடாட மணி மண்டபம் எப்படி இருக்க வேண்டும் என்பதற்காக உதாரணம். (பெரியார் நகரம் இதுபோல் இருக்குமா ?) நவீனத்துவம் எல்லாம் சிறப்பு. மக்களே தவறாமல் விஜயவாடா போனால் தவறாது பார்த்துவிடுக...  ( நாம் அவர்களிடம் கற்றுக்கொள்ள நிறைய இருக்கிறது.) 40 சதவீதம் பணி இன்னமும் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. தரை தளத்தைத் தவிர மேல் தளங்களுக்கு அனுமதி இல்லை. அன்பு கூர்ந்து அதை நிறைவு செய்யும்போது இன்னும் பிரம்மாண்டமாக இருக்கும். 

அவரை வெறுப்பவர்கள் கண்டிப்பாக பார்த்து விடுங்கள் கொஞ்சம் மேனும் புரிந்து கொள்ளலாம். ஜெகன்மோன் ரெட்டி காலத்தில் உருவாக்கப்பட்ட சிறப்பான மண்டபம். நம்ம ஊரு மணிமண்டபங்கள் வாக்கு வங்கி அரசியலுக்கான வாக்கரிசி என்பது புரியும்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

உயிர்சுருட்டி - வாசிப்பனுபவம்

பாரதி முற்றம்

அன்பின் வழியது... நூல் அறிமுகம்