விஜயவாடா பாபுஜி அருங்காட்சியகம்

பாபுஜி மியூசியம் - ஸ்ரீ பிங்கலி வெங்கைய்யா அவர்களை பாபுஜி என அழைக்கின்றனர்.  காந்தியை பாபுஜி எனும் பெயரில் அருங்காட்சியகம் நடத்துகிறார்கள் என்று நினைத்தேன். உள்ளே சென்றான் 1921 இல் விஜயவாடாவில் நடைபெற்ற காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டத்தில் இந்திய தேசியக் கொடியை வடிவமைத்து அந்தக் கூட்டத்தில் காந்தியிடம் கொடி வண்ணங்களின் பொருளை புரிந்துகொண்டு வடிவமைத்த காரியம் பாபுஜி கையளித்துள்ளார். வாட்ஸ் அப்பில் விதவிதமான புரலி அலப்பறைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தது விஜயவாடா பயணம். விஜயவாடா ரயில் நிலையத்தின் முகப்பில் இந்த நினைவு குறிப்பை படத்துடன் வைத்துள்ளனர். இந்தக் கட்டடம் அழகான பழைய காலத்து பிரிட்டிஷ் மாதிரியான கட்டிடம். இடம் கொடுத்த மன்னரின் கல் சித்திரம், விக்டோரியா மகாராணி உயரமான வரைபடம் இங்கு உள்ளது. 1961 ஆந்திர அரசு பாபுஜி பெயரில் இடத்தை அருங்காட்சியமாக மாற்றி உள்ளது. பழைய பாணியிலான கற்களால் அடக்கப்பட்ட கட்டிடம். அழகாக இருக்கிறது. (அம்பேத்கர் மணி மண்டபத்திற்கு பக்கத்தில்.) 

அருகே புதுக்கோட்டை வானியலான அருங்காட்சியகம் இடம்பெற்று இருக்கிறது. நவீன வானிலான அருங்காட்சியகம் பௌத்த நினைவிடங்கள், சமண நினைவிடங்கள், சிவாலயங்கள், விஷ்ணு ஆலயங்கள், கற் சிற்பங்கள் பல வகை சிற்பங்கள் (லைம் ஸ்டோன், சிகப்புக்கள், சலவைக் கல், உப்பு பாறை, அடர்த்தியான உப்பு பாறை பலவை சிற்பங்களின் அணிவகுப்பு அடடா ரகம்) ஆண்களுக்கு நிகரான பெண் தெய்வங்களின் அணிவகுப்பு சிறப்பு. புதுக்கோட்டை போன்று செப்பு சிற்ப வேலைப்பாடுகள் சீன களிமண் வேலைப்பாடுகள் துணிகளின் பழைய வண்ண மாதிரிகள் கத்தி துப்பாக்கி ரிவால்வர் பீரங்கிகள் குண்டுகளின் பலவகை பட்டியல் நீண்டு கொண்டே போகிறது. 

என்னைக் கவர்ந்த நவீன வடிவம் தொடுதிரை மூலம் ஆந்திரா பகுதியில் சுற்றி இருக்கக்கூடிய பௌத்த ஆலயங்கள் அதன் படங்கள் அதன் விவரங்கள் என சமண ஆலயங்கள் விஷ்ணு ஆலயங்கள் சிவா ஆலயங்கள் என தனித்தனியாக பகுத்து குறித்து வைத்துள்ளனர் இந்த நவீன வடிவத்தை எப்போது நம்மூரில் பார்க்க போறோம் என்று தெரியவில்லை. எழுத்து வடிவங்களின் சிற்பங்களை தனியாக காட்சிப்படுத்தியுள்ளனர். ஐம்பது ரூபாய் நுழைவு கட்டணம் அர்த்தமுள்ள பயணம். 

தகவலுக்காக சொல்கிறேன் இரண்டு நாட்களும் 20 கிலோமீட்டர் நடந்து இருப்பேன் ஆறு ஏழு கோயில்கள் தான் பார்த்தேன். முகத்துக்கு முக்கம் கோயில்கள் இல்லை. நடிகர்களின் சிலை அதிகமாக இருக்கிறது. 
காரல் மார்க்ஸ் ஏங்கல்ஸ் லெனின் அம்பேத்கர் காந்தி ஆகியோர் சிலைகளை இங்குதான் உயரமாக பார்த்தேன். தரைக் கடை வியாபாரிகளின் சாலை ஒழுங்கு மதிப்பிற்குரிய வரவேற்பு உரிய ஒன்று. 

லெனின் சிலை அருகே பழைய புத்தக கடை ஏராளம். காலையில் 6:00 மணியிலிருந்து இரவு பத்து மணி வரை மாணவர்கள் நூல்களை வாங்கிக் கொண்டே இருக்கிறார்கள். ஞாயிற்றுக்கிழமை நான் தங்கி இருக்கும் ஹோட்டலுக்கு அருகே நூல்களை குப்பையாக குவித்து வைத்து தள்ளுபடியில் விற்பனை செய்கிறார்கள். கூட்டம் அலைமோதுகிறது இது எனக்கு ஆச்சரியமாக இருந்தது. சில ஆங்கில நூல்களை பைரசி பதிபினை மலிவு விலைக்கு வாங்க தேடுதல் முயற்சியில் 'வாய்ப்பில்லை ராஜா' என திரும்பி விட்டேன் (கூட்டம்) ரயில் நிலையம் முழுவதும் காந்தியின் வாசகமும் ஓவியமும். ஒரு போஸ்டர் கூட ஒட்டவில்லை எனக்கு பொறாமையாகிவிட்டது. ரயில் நிலையத்தில் காத்திருக்கும் அறையில் மனிதர்களை விட சார்ஜர் அதிகம். 

வாழ்த்துக்கள் விஜயவாடா... சற்றேற குறைய 35 புது உணவுகளை சுவைக்க முடிந்து 25க்கு நல்ல மார்க் அளிக்க முடிந்தது. நம்ம ஊர்ல முந்திரிகள் அதிகம் ஆனால் எந்த உணவுகளிலும் அதிகமாக பயன்படுத்துவதில்லை (பொங்கல் நீங்கலாக) எல்லா உணவிலும், ஒரு பிடி உணவில் இல்லாமல் இருப்பதில்லை. (சப்பாத்திக்கு மட்டும் விதிவிலக்கு).

வீட்டு வாசலில் சாக்பீஸ் கொண்டு கோடுகளில் கோலம் போடுகிறுர்கள் (நாலுப் புள்ளி கோலம் போல)

அரைகுறை ஆங்கிலத்தை மன்னிக்கணும் குறையரை ஆங்கிலத்தை வைத்துக்கொண்டு ஒப்பேத்தி தப்பித்தோம் பிழைத்தோம் என...

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பேரழிவின் வாருங்காலம்

அன்னவாசல் தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்ற மகளிர் தின மரநடும் விழா மற்றும் கவிஞர் செங்கை தீபிகாவின் பறக்க தயங்கும் பட்டாம்பூச்சி நூல் வெளியீடு...

அம்பேத்கர் ஆக்கங்கள் மக்கள் பதிப்பு அறிமுகம்