முத்துக்குடா -புதுக்கோட்டையின் அலையாத்தி காடு
புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார் கோவில் ஒன்றியத்திற்கு உட்பட்ட கடற்கரை நகரமான முத்துக்குடா அலையாத்தி காடுகள் சுற்றுலா செல்ல மாவட்ட நிர்வாகத்தால் தமிழ்நாடு சுற்றுலாக் கழகம் இணைந்து மேம்படுத்தும் பணி நடந்து வருகிறது படகு கட்டணம் தான் கூட ஆனால் நல்ல அனுபவம். எதிர்காலத்துக்கான மேம்படுத்தும் பணி அலையாத்தி காடுகளுக்குள் சுற்றுலாப் பயணிகள் சென்று வரும் வகையில் பிச்சாவரம் போன்ற ஏற்பாடுகள் ஆமை வேகத்தில் நடைபெறுகிறது. எவ்வாறு இருந்தபோதும் எதிர்காலத்தில் அலையாத்தி காடுகளின் நல்ல அனுபவத்தை பெறலாம். அதற்கான இயற்கை சூழல் சிறப்பாக இருக்கிறது. பறவைகளை அதிகம் காண முடிந்தது. படகு ஓட்டுநர் சிறந்த தகவல்களை நமக்கு வழங்கினார். இது ஒரு மட்டும் சென்றதால் பிறரோடு பகிர்ந்து கொண்டோம் படகு பயணக் கட்டணத்தை 20 நிமிட பயணம் கட்டணம் ஒரு படகில் 8 இருக்கைகள் ₹900. நவம்பர்- பிப்ரவரி மாதங்களில் பறவைகளை காணலாம். இது மீமிசலிருந்து ஏழு கிலோ மீட்டர் தொலைவில். மீமிசலில் கடற்கரை (mini beach) இருக்கிறது. காலை வேளையில் நேரடியாக மீன்கள் கொள்முதல் செய்யலாம். சேற்று இறால் என்று சொல்லக்கூடிய இறால் மீன் ரகம் அதிகாலையில் நெஞ்சளவு தண்ணீர் இருக்கக்கூடிய அலையாத்தி காட்டு பகுதிகளில் பொதுமக்கள் பிடிக்கிறார்கள். உள்ளூர் மக்களின் உயர்தர உணவாக சேற்று இறால் மீன் உள்ளது. காலையில் கரை ஓரத்தில் நீர் குறைவாக இருக்கும் மதியத்திற்கு பிறகு உயர்கிறது. இது காலையில் மட்டும் இறால் மீன் பிடி நடைபெறுகிறது. கிழக்கு கடற்கரை சாலையில் இருந்து ஒன்னேகால் கிலோ மீட்டரில் இந்த சுற்றுலா தளத்தை அடையலாம். அதற்கான சாலை பணிகள் நடைபெறுகிறது. தற்போது ஊருக்குள் போய் தான் செல்ல வேண்டும். எதிர்காலத்தில் நல்ல சுற்றுலாத்தலமாக இது மாறும் என்பதற்கான இயற்கை அமைப்பு சிறப்பு. கூகுள் மேப்பில் நீங்க இது காணலாம்.
இடதுசாரி போராளிகளின் சிலுவை முத்து நினைவிடம், அப்புகுட்டி நினைவிடம் ஆகியவற்றையும் மீமிசல் இருந்து ஆவுடையார் கோவில் வரும் வழியில் கண்டு களிக்கலாம். மணமேல்குடி ஆசிரியர் நமது கலை இலக்கிய பெருமன்ற மணமேல்குடி பொறுப்பாளர் தோழர் க. இளங்கோ வடிவேல் அவர்களின் புதல்வர் திருமணத்தின் பொருட்டு நமது மாவட்டத்தில் உள்ள அலையாத்தி காடு அனுபவத்தை பெற முடிந்தது.
கருத்துகள்