போர் எதிர்ப்பு - AIPSO

நான் ஒன்றும் அப்பாடக்கர் இல்லை... 
"டம்மி பீசு தான்"
எங்க வீட்டுக்கு வந்த விருந்தினரை பாதுகாக்காமல் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தேன். அது என் பண்பாடு அல்ல ஆனாலும் கையறு நிலையிலையே, ஏனெனில் என் தகுதிக்கு மீறி பல பொய்கள் சொல்லி என் குடும்பத்தின் அதிகாரத்தை கைப்பற்றினாலும் எதார்த்தம் உள்ளீடாக இருக்கிறது. 

30 நாட்களுக்கு அடுத்த வீட்டில் உப்பு வாங்க செல்ல ரோட்டிடம் அனுமதி இருந்தால்தான் இல்லையென்றால் சொரணைக்கு வரி கட்ட வேண்டிய நிர்ப்பந்தத்தில்...

என் ராஜதந்திரங்கள் இப்போது பல்ல்லிக்கிறது. வீட்டு அதிகாரம் பெறுவதெல்லாம் பொய் என்பது புரிந்து விட்டது. அன்பின் வழி அறம் உலகை ஆளுமை செய்யும் என்று நினைத்தேன். இல்லை நண்பர்களே பக்கத்து வீட்டு பட்டாகத்திக்கு பயப்படுகிறேன். 

எனக்கு மட்டுமல்ல, எனக்குப் பின் யார் இந்த அதிகாரத்துக்கு வந்தாலும் இதுதான் நிலை. அன்பு செய்தது போதும். ஆயுதம் செய்யனும் பட்டினி கிடந்தாவது. வலிக்காத மாதிரியே எவ்வளவு நாள் நடிப்பது... 

விஸ்வ குரு கட்டியமைத்த வல்லரசு கற்பிதம், புனைவு என்று புரிந்த நாள் இன்று. 147 கோடி மக்கள் தொகையுடன் பெரிய பலம் வாய்ந்த இராணுவ என்ற பழைய கற்காலத்து கற்பனை முடிவுக்கு வந்துவிட்டது, தொழில்நுட்ப வளர்ச்சியே வல்லரசு காரணி. எட்டு நாள்கள் போரில் ட்ரோன், ரேடார், போர் விமானம் மற்றும் தந்திர உபாயம் இவைகளே பயன்படுத்துகின்றனர் அரசுகள். சேதாரமோ போர் வீரர்களுக்கு இல்லை. அழிவது மக்களும் அவர்களின் உடமைகளுமே. தொழில் நுட்பத்தில் சமமான பலத்த பெறவில்லை எனில் மக்கள் தொகை எண்ணிக்கை - அகிம்சை - சமாதான சக வாழ்வு என்பதெல்லாம் வெத்து வேட்டே. அதிகாரச் சண்டையில் அப்பாவி மக்கள் இறப்பதே புதிய உலக ஒழுங்காக... ஆகவேதான் விஸ்வகுரு - அவரின் நிர்வாகம் அவரின் மக்களும் யாகம் வளர்த்து போரை நிறுத்தும் முயற்சியில் ஈடுபடும் வரை அடுத்தவர் ஆட்டுவிக்கும் பொம்மையாக இருக்கனும். டிமோவை இன்ஸ்டாவில் 10 மில்லியன் பேர் பின்தொடர்ந்தாலும், டிரம்பை அவர் பின் தொடர்ந்தே ஆகவேண்டும். ஈரான் பூனைக்கு மணிக்கட்டும் முயற்சியில்... டிமோ...? வல்லரசு, ஐநாவில் 'வீட்டோ' அதிகாரம் என்பது போன்ற எல்லா உருட்டும் துரோகத்தின் நாடகமே. 

கார்பரேட் கைக்கூலியான நான், இனி ஏகாதிபத்திய அடிமையாக இரட்டை வேஷம் போடனும். கோமிய அரசியல் அதிகாரம், இதை மட்டும் தான் செய்யும். ஈரான் மத அடிப்படை நாடு என்று சொல்லியே அவர்களின் ஆயுத பலத்தை மதிப்பிட மறந்தேன். ஆப்ரிக்கா அடிமையைவிட என் குழந்தைகளின் எதிர்காலம் மோசமாக போகாமல் இருக்க என்ன செய்யலாம்?

இவர்களை நம்பி இன்று கடனேனு கடமையை செய்தேன் 👇🏽 (போர் வலி தாளாதது- மனிதன் போன்ற முன்னேறிய விலங்கு இவ்வளவு பின்னேறிய செயலை செய்வது நாகரீகத்தின் மீது அறிவின் மீதும் வெறுப்பு. தொழில் நுட்பம் வளர்ச்சி சேதங்களை சிலாகிக்கும், பலி எண்ணிக்கை உயர்கையில் ஆணவத்தை அரியணை ஏத்தி சிரிக்கும். எளியவர்களின் உழைப்பும், வியர்வையும் திருடிய வல்லாதிக்கம் இனி இரத்தத்தை சிதறடிக்கும்

(நண்பர் வளைகுடா நாட்டில் ஆயில் கம்பெனியில் வேலை செய்கிறார். அவருக்கு காலையில் வந்த செய்தியை எனக்கு பார்வேர்ட் செய்திருந்தார்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஜெ.ஜெ. கல்லூரி & தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் - சிறுகதை பயிலரங்கம்

அலைகளில் நெளியும் நிழல்... நூல் வெளியீடு

ஆவுடையார் கோவில் - பயணம்