பீகார் தேர்தல் - நம்பிக்கையான பின்புல புரிதல்
பீகார் தேர்தல் ஒரு கழுகு பார்வை அம்மாநிலத்தின் சமூக பொருளாதார வரலாற்று பின்புலத்தின் ஊடே புரிந்து கொள்ள வேண்டி இரக்கிறது. மகா கூட்டணியின் தோல்வி வலதுசாரி அரசியல் எதிர்பார்ப்பாளர்களை மனசு சோர்வுர செய்திருக்கு. இதை நான் நம்பிக்கையின் வெளிச்சமாக உணருகிறேன். முதலில் மோடி ஆதரவு பெற்ற தேசிய ஜனநாயக கூட்டணிக்கு ஆதரவாக வாக்களிக்கவில்லை. மகா கூட்டணிக்கு எதிராக வாக்களிக்கப்பட்டிருக்கிறது. ஏன் ராகுல் காந்திக்கு எதிராக வாக்களித்திருக்கிறார்கள் ?
நமது சிந்தனையில் பீகார் குறித்து பல்வேறு கதையாடல்கள் ஊறி மொதுமொத்து இருக்கிறது. மிகவும் பின்தங்கிய மாநிலம் வெளிமாநிலங்களுக்கு வாழ்வாதாரத்திற்கு இடம்பெயர் இருக்கிறார்கள். கற்றல் குறைவு, பழைய பண்பாட்டு விழுமியங்களை குறிப்பாக சாதி படிநலைகள் இருக்கும் நிறைந்ததாக உள்ளது என பல பின் வாங்கிய நிலைகளை நாம் அறிகிறோம். அது உண்மையும் கூட.
தமிழகம் போன்று ஒரு கிராமத்தில் 500 பேர்களில் 450 பேர் நிலங்களை கொண்ட கிராமங்கள் அவை கிடையாது. 50 பேரிடம் மட்டுமே நிலம் இருக்கும். அப்படி என்றால் அதன் அதிகாரம் சலுகைகள் நீதி காவல்துறை பல்வேறு நிறுவன அமைப்புகளில் பொறுப்புகள் என எல்லாவற்றிலும் சாதி ஆதிக்கம் நிறைந்து காணப்படும் மாநிலம். கடந்த காலங்களில் காங்கிரஸ் கட்சி சனாதன மனுநீதியை அடைகாத்துக் கொண்டே அதை மாற்றும் சக்தி கொண்ட எல்லோருக்கும் எல்லாம் என்ற சமூக நீதியை கிடப்பில் போட்டு வட்டது. அதிகாரத்தை அடைவதற்காக சனாதனத்தை அடைகாத்தது. அதிகாரத்தில் இருக்கும் உயர் சாதி பொறுப்பாளர்கள் தங்களுடைய பொருளாதார ஆதாயத்தை இழக்க விரும்புவார்களா ? அவர்கள் மகா கூட்டணிக்கு எதிராக வாக்களிக்கிறார்கள்.
கடந்த காங்கிரஸ் தலைவர்களைப் போல் ராகுல் காந்தி இரட்டை வேடம் போடவில்லை தெளிவாக அரசியல் சாசனத்தை வழங்கிய சமூக நீதியை தனது அரசியல் முழக்கமாக கொள்கை முழக்கமாக கூட்டணி தர்மமாக வலியுறுத்தி களமாடுகிறார். நம்பிக்கைக்கு விதமாக இடதுசாரிகள் முற்போக்கு கட்சிகள் அவரோடு அணி சேர்ந்து போராடுகின்றனர். இரட்டை நிலை எடுக்கும் வலைபின்னல் அமைப்பு கொண்ட கடந்த கால அதிகாரத்திலிருந்து கட்சிகள் குறைந்த சீட்டில் ஏதோ ஒரு கூட்டணியில் ஒட்டுண்ணி அதிகாரத்திற்காக தனித்துப் போட்டியிடுகின்றன (பகுஜன் சமாஜ் - ஓ வை சி - பிரசாந்த் கிஷோர் போன்ற புது கட்சிகள் இன்ன பிற) இவர்கள் சந்தர்ப்பவாதிகள். வலுவான ஆளுங்கட்ச்சியாக இருந்த நிதீஷ் குமாரின் ஆதிக்க சாதி அதிகாரம் ஒன்றிணைந்து வெற்றி பெறுகிறது. பிற்பட்ட மற்றும் ஒடுக்கப்பட்ட ஜாதிகள் சிதறுண்டு கிடக்கின்றன. இங்கு நாம் கவனிக்க வேண்டியது மனுநீதியை பின்பற்றக்கூடிய ஆதிக்க சாதிகள் ஒருங்கிணைந்து வெற்றி பெற்றிருக்கிறார்கள். சமத்துவத்தை சமூக நிதியை பேசக்கூடியவர்கள் சிதறுண்டு கிடக்கிறார்கள்.
ராகுல் காந்தி இடம் பெறும் கூட்டணி கட்சிகள் சமூக நீதியை முன்னிறுத்துகின்றன. இது நாள் வரை அதிகாரத்தை சுவைத்தவர்கள் இழக்க விரும்புவார்களா. மாட்டார்கள். தேர்தல் ஆணையம் சட்ட வரம்பு மீறல் எல்லா தரப்புகளிலும் கைதேர்நத அவர்கள் வெற்றி பெறுகிறார்கள். தேர்தல் நடத்தை விதி அமிலுக்கு வந்து விட்டால் தமிழகத்தில் ஆளும் கட்சிகள் மீராது. ஆனால் வேட்பாளர் இறுதி செய்யப்பட்ட பிறகு 76 லட்சம் குடும்பத்திற்கு ₹10000 வங்கிக் கணக்கில் சேர்க்கப்பட்டிருக்கிறது. தேர்தலுக்காக உருவாக்கப்பட்ட வாக்குறுதி. வருமானம் குறைந்த பின்தங்கிய மாநிலத்தில் பெரும்பான்மை மக்கள் அரிய தொகையை நம்பிக்கை துரோகம் செய்யாது வாக்களிக்க செய்வது உழைக்கும் மக்களின் அற விழுமியமாகும். தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றி பெற்றது அதிசயம் ஒன்றும் அல்ல எதார்த்தமே.
ராகுல் காந்தியின் வெளிப்படையான மனுநீதிக்கு எதிரான சமூக நீதி அரசியல் பீகாரின் இரண்டு துருவ சேர்க்கையை ஏற்படுத்தி இருக்கிறது. வாக்கு வங்கி நிறைந்த பகுஜன் சமாஜ் கட்சி மிகப்பெரிய சரிவை சந்திக்கிறது. எதிர்காலத்தில் மேலும் இது சமூக நீதியா ? மனுநீதியா? என்ற நோக்கில் அரசியல் கூர்மைப்படுத்தப்பட்டு எதிர்கால சந்ததியினர் எதை நோக்கி நகர வேண்டும் என்ற நிலைப்பாட்டை உருவாக்கி இருக்கிறது.
பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி தனது நேர்மையான இந்துத்துவ அரசியலை விட்டு விட்டு சீரழிவான ஆள் தூக்கி அரசியல் அவதூறு பரப்பு அரசியல் ஆதிக்க பிரிவினரின் அடியாள் அரசியலை செய்கிறது. மலிவான பிரித்தாலும் சூழ்ச்சி அரசியலை அதிகாரக் குவிப்பை பிரதிநிதித்துவப்படுத்துகிறது. இந்திய சமூகத்தில் கண்டிப்பாக இதற்கு விலை உண்டு.
என் அளவில் ராகுல் காந்தி ஆர் எஸ் எஸ் எதிரான சமூக நீதி அரசியலை வலுவாக வெளிப்படையாக செய்கிறார். தேர்தல் தோல்வி என்றாலும் துருவ சேர்க்கையில் இது அரசியல் வெற்றி அவருக்கு. எதிர்கால சந்ததி இதை நோக்கி தான் நகரும் எனவே தற்காலிக பின்னடைவை கருத்தில் கொண்டு மக்களை அரசியல் பயிற்று செய்வதில் நாம் பின்வாங்க கூடாது.
கருத்துகள்