இடுகைகள்

டில்லி லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

டில்லி பயணம் - தேசிய அருங்காட்சியகம் அடட...

படம்
அகில இந்திய சமாதான ஒருமைப்பாட்டுக் கழக தேசிய செயற்குழு கூட்டம், குழு போட்டாவுடன் நிறைவுற்றது. சுர்ஜித் பவன் தலைநகரில் உள்ள சிபிஎம் அலுவலகம் ஆகும். சிறந்த கட்டுமானமும் உள்கட்டமைப்பும் கொண்டுள்ள நவீன அரங்கம். உணவு, குளிரூட்டப்பட்டறை கூட்ட அரங்கு என அனைத்தும் சிறப்பு. கடந்த கூட்டத்தில் சீதாராம்யெச்சூரி கடைசியாக நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வேர்ல்ட் பீஸ் கவுன்சிலிங் பதக்கம் பெற்று அடுத்த நாளே உடல் நலக் கோலாரால் ஒரு வாரத்தில் இறந்து போனோர்.  தேசிய அருங்காட்சியதற்கு சென்றேன். இந்தியா கேட்டிற்கு பக்கத்தில். 20 ரூபாய் நுழைவு கட்டணம். மூன்று தளங்களும் குளிரூட்டப்பட்ட அறை. ஒரு நேர்த்தியான அருங்காட்சியகம். முழுவதும் ராணுவ மையம். கைப்பையை பாதுகாக்க தனி இடம் இலவசமாக. நுழைந்த உடனேயே சிந்து சமவெளி நாகரிக அருங்காட்சியகம் ப லதரப்பட்ட தரவுகள், ஆச்சரியங்கள், சிந்து சரஸ்வதி நாகரிகம் என்று மூக்கு நுழைத்திருந்தன இன்றைய ஆட்சியாளர்கள் . ஆவலுடன் பார்க்க சென்ற நடன மங்கையை காணவில்லை ஏமாற்றம். ஓவியங்கள், சிற்பங்கள், மாதிரி காட்சிகள், பாடம் பண்ணப்பட்ட உடல் எச்சம், கட்டிட அமைப்பு, வீடு அ...

தேசிய காந்தி அருங்காட்சியகம் - டில்லி

படம்
இந்தியாவில் பல இடங்களில் காந்தி அருங்காட்சியகம் உண்டு. மதுரை, விஜயவாடா பார்த்த அனுபவம் உண்டு. டெல்லி காந்தி பயன்படுத்திய பொருட்களை வைத்துள்ளார்கள். அவர் கடைசியாக கொண்டு துலைத்த ஆடை, இடுப்பில் தொங்கிய கடிகாரம், பேனா தரை விரிப்புகள் ராட்டினம், அவர் பேசிய பேச்சுக்களின் ஒலி வடிவம், தண்டி யாத்திரை காணொளி காட்சிகள், மொத்த கண்காட்சியில் அவரின் புகைப்படங்கள் மட்டும் 90 சதவீதம் இருக்கும். ஓவியங்கள், பரிசு பொருட்கள் ஆங்கில அரசாங்கம் போர் வீரர்களுக்கு ஆம்புலன்ஸ் சேவை செய்த நிகழ்வுக்காக அவர் வழங்கிய அரசாங்கத்தின் கௌரவ பட்டம் (இப்போதுதான் இது எனக்கு தெரியும்) ஆப்பிரிக்காவில் 21 வருடம் வழக்கறிஞராக பணியாற்றிய போது அவர் படித்த நூல்கள், மதுரையில் அவர் அணிந்த கதர் ஆடை, எனக்கு பல்வேறு தகவல்களை கொண்டுள்ளது.  அருகில் மற்றொரு காந்தி முழுக்க முழுக்க போட்டோக்களால் நிறைந்த அவரின் வரலாறுகளை பல்வேறு பத்திரிக்கை புகைப்படங்களை செய்திகளை கடிதங்களை ஆவணப்படுத்தி உள்ளார்கள். (பிரம்மாண்டம்) வெளிநாடுகள் அந்தக் கேலிச்சித்திரங்கள், என அதிகம்.  தலைவர்கள் நண்பர்கள் உறவினர்கள் குழந்தைகள் பொதுக்கூட்டம் ரயில் பயணம் பு...