தேசிய காந்தி அருங்காட்சியகம் - டில்லி

இந்தியாவில் பல இடங்களில் காந்தி அருங்காட்சியகம் உண்டு. மதுரை, விஜயவாடா பார்த்த அனுபவம் உண்டு. டெல்லி காந்தி பயன்படுத்திய பொருட்களை வைத்துள்ளார்கள். அவர் கடைசியாக கொண்டு துலைத்த ஆடை, இடுப்பில் தொங்கிய கடிகாரம், பேனா தரை விரிப்புகள் ராட்டினம், அவர் பேசிய பேச்சுக்களின் ஒலி வடிவம், தண்டி யாத்திரை காணொளி காட்சிகள், மொத்த கண்காட்சியில் அவரின் புகைப்படங்கள் மட்டும் 90 சதவீதம் இருக்கும். ஓவியங்கள், பரிசு பொருட்கள் ஆங்கில அரசாங்கம் போர் வீரர்களுக்கு ஆம்புலன்ஸ் சேவை செய்த நிகழ்வுக்காக அவர் வழங்கிய அரசாங்கத்தின் கௌரவ பட்டம் (இப்போதுதான் இது எனக்கு தெரியும்) ஆப்பிரிக்காவில் 21 வருடம் வழக்கறிஞராக பணியாற்றிய போது அவர் படித்த நூல்கள், மதுரையில் அவர் அணிந்த கதர் ஆடை, எனக்கு பல்வேறு தகவல்களை கொண்டுள்ளது. 
அருகில் மற்றொரு காந்தி முழுக்க முழுக்க போட்டோக்களால் நிறைந்த அவரின் வரலாறுகளை பல்வேறு பத்திரிக்கை புகைப்படங்களை செய்திகளை கடிதங்களை ஆவணப்படுத்தி உள்ளார்கள். (பிரம்மாண்டம்) வெளிநாடுகள் அந்தக் கேலிச்சித்திரங்கள், என அதிகம். 

தலைவர்கள் நண்பர்கள் உறவினர்கள் குழந்தைகள் பொதுக்கூட்டம் ரயில் பயணம் புகைப்படத்திற்கு போஸ் கொடுக்காத படங்கள் நிறைய, போஸ் கொடுக்கும் படங்களும் இருக்கிறது. 
அவர் பயன்படுத்திய பொருட்களின் அவர் பெரிய செல்வந்தர் என்பதை அடையாளம் காட்டுகிறது. அப்புறம் தலைவனுக்கு இரத்த அழுத்தம், நீரழிவு இருந்திருக்கிறது கூடவே அதற்கான இரத்த அழுத்தமானி, ரத்தத்தைப் பற்றி தெரிந்து கொள்ள நுன்னோக்கி, பேனாக்கள், கைத்தடி என பல வகைகளை காண முந்தது. தண்டி யாத்திரையில் உள்ளிட்ட பல கூட்டம் நடவடிக்கைகளில் பலரும் தொப்பி அணிந்திருப்பார்கள் ஆனால் காந்தி உயர்ந்த வாழ்க்கை விட்டு எளிய உயரத்திற்கு மெனக்கட்டு இருக்கிறார். 70 வயதுக்கு மேல் சைக்கிள் விருப்பத்தின் பேரில் நடை சைக்கிள் என பல முகங்களுக்காக சென்று இருக்கிறார். அவருடைய அமைதியாத்திரை அவருடைய உடல் நலம் நெருக்கடியான காலங்களில் நடைபெற்றது. அவ்வளவு முனைப்புடன் இருந்திருக்கிறார். தன் துணைவியாரின் மரணத்தில் மிகுந்த சோறுடன் மன வருத்தத்துடன் இருப்பதை அவருடைய புகைப்படங்களே சாட்சி. சலிக்காத நுகர்வு காந்தி 

காந்தி குறித்து எவ்வளவு தெரிந்து கொண்டாலும் திகட்ட மாட்டேங்குது. இன்று வரையிலும் அவ்வளவு போட்டோக்களிலும் காந்தி உயிர்ப்புடனே இருக்கிறாரே ? ஆச்சரியமுமே. தேசிய தலைநகரில் அருங்காட்சிய அனுமதி இலவசம் காந்திக்கு என்று பல நூறு ஏக்கர் ஒதுக்கி இருக்கிறார்கள். தெகட்டாத நினைவுகள்.

இந்த படத்திற்கு கீழே இரத்த கறை படிந்த உடை கண்ணாடி பேழையில்...

கேலிச்சித்திரம் இன்னும் நிறைய...

போரில் அவசர உதவிக்கு வாகனம் இயக்கியதால் பாராட்டு...

தில்லையாடி வள்ளியம்மை வரலாற்றை டில்லியில் காந்தியின் வழி அறிய வேண்டிய துர்பாக்கியம் எனக்கு...
6 வயது இந்திராவுடன்...

பௌத்தம் குறித்து...

கண் கண்ணாடி, கடிகாரம்...

பேனா...

இரத்தம் மாதிரி புரிதலுக்காக...

இரத்த அழுத்தம் அறிய...

காலணி  8-9 அளவு. பாதத்தின் முன் பக்கம் அகலமாக, பின் பகுதி குறுகிய...

மதுரையில்...

இறப்பதற்கு முதல் நாள் வாசிப்பில்...

காந்தியின் முன்னோடிகள்...

சத்தியா கிரகத்தில் புகைக்குண்டு...

சைக்கிளில் எம்மான்....

மருத்துவ சேவைக்காக பதக்கம் 

சட்சிக்காக சுயமி...

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

உயிர்சுருட்டி - வாசிப்பனுபவம்

போர் எதிர்ப்பு - AIPSO