வேங்குடிவயல் - அண்டனூர் சுரா - புதினம்
கடந்த ஆண்டு புதுக்கோட்டை மாவட்டத்தின் வேங்கை வயல் கிராமத்தில் பெரும்பான்மை பட்டியல் இன மக்கள் பயன்படுத்தும் குடிநீரில் மலம் கலக்கப்பட்ட நிகழ்வு தமிழ் சமூகத்தை அதிர்ச்சிக்குள்ளாக்கி நமக்கு நாமே வெட்கப்பட வேண்டிய நிகழ்வாக இருந்ததை நாம் எல்லோரும் அறிவோம். பல்வேறு அமைப்புகளின் போராட்டங்கள் காவல்துறையின் விசாரணை என தொடர்ந்து கொண்டிருந்தாலும், இன்று வரையில் அதன் குற்றவாளிகள் தண்டிக்கப்படவில்லை. கடந்த காலங்களில் அரசு மேல்நிலை நீர் தேக்க தொட்டியில் சத்துமாவு கலந்தது என்று அறிக்கை சமர்ப்பித்து இருக்கிறது. இப்படி தொடர்ந்து அரசும் அதிகாரவர்க்கும் இணைந்து இவ்வழக்கின் உண்மைகளை கொண்டு வருவதில் சுணக்கம் காட்டும் இந்த வேளையில், அதே மாவட்டத்தை சேர்ந்த எழுத்தாளர் அண்டனூர் சுரா மனிதர்கள் அல்லாத பிற உயிரினங்களை கொண்டு மீ புனைவாக வேங்கை வெயில் கிராமத்தின் பாகுபாடு அரசியலை பின்புலமாகக் கொண்டு புனையப்பட்ட நாவல். அதில் இடம்பெற்று இருக்கும் விலங்குகள், பறவைகள், ஊர்வன, தாவரங்கள், மலைகள், நீர்நிலைகள், மரங்கள், மலர்கள், புற்கள் அப்பகுதி ஆட்சி செய்த மன்னர்கள் என கதை மாந்தர்கள் ஆக்கி அதனுடைய வாழ்வியல் ந...