இடுகைகள்
ஹைக்கூ பயிலரங்கு - ஜெ.ஜெ. கல்லூரி
- இணைப்பைப் பெறுக
- X
- மின்னஞ்சல்
- பிற ஆப்ஸ்
தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் புதுக்கோட்டையும் - ஜெ.ஜெ. அறிவியல் கலைக்கல்லூரி தமிழருவி இலக்கிய பேரவை இணைந்து ஏற்பாடு செய்திருந்த மாணவர்களுக்கான ஹைக்கூ பயிற்சி பட்டறை கல்லூரி வளாகத்தில் ஆகஸ்ட் 19,20&21 ஆகிய தேதிகளில் தமிழ் துணைத் தலைவர் முனைவர் கு.தயாநிதி அவர்களின் தலைமையில் கல்லூரி முதல்வர் முனைவர் பரசுராமன் அவர்கள் வாழ்த்துரை வழங்க கல்லூரி தாளாளர் கவிதா சுப்பிரமணியம் அவர்கள் வாழ்த்துரை வழங்கி தலையிலக்கிய பெருமற்றத்தின் மாவட்ட தலைவர் எழுத்தாளர் அண்டனூர் சுரா அவர்கள் தோக்குறையாற்றி தொடங்கி வைத்தார்கள். முதல் வகுப்பு தமிழ்ச்செம்மல் கவிஞர் ஜீவி ஹைக்கூ வை அறிமுகம் செய்தார். இரண்டாம் உப்பாக முனைவர் அய்யாறு ச.புகழேந்தி அவர்கள் ஹைக்கூலின் பல்வேறு போக்குகளை ஆய்வு நோக்கில் அறிமுகப்படுத்தினார். இரண்டாம் நாள் கவிஞர் ஜொ. டெய்சி ராணி அவர்கள் மாணவர்களுக்கு தனித்தனியாக மாதிரிகளை வழங்கி படங்களுக்கு கவிதை எழுதச் சொல்லி பரிசுகள் கொடுத்து அரங்கத்திலே பலரை எழுத வைத்தார். தொடர்ந்து சோழச்சி அவர்கள் கவிதையின் பரிணாமத்தில் எவ்வாறு தோன்றி எவ்வாறு இன்று விரிந்து இருக்கிறது என்ற பொறுமையில் மாணவர்களை மகி...
பறம்புமலை - பிரான்மலை - கொடுங்குன்றிஸ்வரர்
- இணைப்பைப் பெறுக
- X
- மின்னஞ்சல்
- பிற ஆப்ஸ்
சங்க இலக்கியங்களில் பறம்புமலை கபிலர் முல்லைக்கு தேர் கொடுத்த வேள்பாரி ஆட்சி செய்த பழைய மலைப்பகுதியில் எனது ஐந்தாவது கவிதை தொகுப்பு முப்பரிமாண புழுக்கம் வெளியீட்டு நிகழ்வு சிறப்புற நடைபெற்றது. மேற்கண்ட நூலினை தோழர்கள் முன்னிலையில், சிங்கப்பூர் பொழில் பண்பலை ஐயா கிருஷ்ணமூர்த்தி அவர்கள் வெளியிட்டார். மலையின் மேல் வெளியிடுவதாக திட்டம், பலருக்கும் ஏறுவதில் சிரமம் என்பதால் கீழே இருக்கக்கூடிய வைதீக தளமான, கொடுங்குன்றீஸ்வர் ஆலயத்தில் வெளியிடப்பட்டது. கீழிருந்து 3.15 மணி நேர பயணம். பறம்புமலை உச்சியை அடையலாம். நடப்பு வழக்கில் பிரான்மலை எனவே அழைக்கப்படுகிறது. சங்க இலக்கியங்கள் தரவுப்படி கடினமான முயற்சியுடன் மலையின் உச்சிக்கு செல்ல முடியும். அன்றைய காலத்தில் வழித்தடமோ, எல்லோரும் பயன்படுத்தும் படியோ இருப்பதற்கான வாய்ப்பு இல்லை. அதைத் தாண்டி ஒருவர் மேலே செல்வது பலரையும் காணடித்திருக்கும். வைதீக மரபுப்படி அங்கு இருக்கக்கூடிய இறைவனுடைய பெயர் கொடுங்குன்றீஸ்வரர். சங்க இலக்கிய வாழ்வியலுக்குப் பிறகு சமீபத்தில் ஏற்பட்ட வைதீக மரபின்படி இந்த குன்றில் ஏறுபவர்கள் சிரமப்பட வேண்ட...