சாத்தானே உண்மையின் கடவுளாக

சோப்பில் குளிக்காத விலங்குகளுக்கு ரோமங்கள் நேர்த்தியாக.
நானோ நாளுக்கு இரண்டு முறை நீராட. 
ஆனாலும் பிசுபிசுப்பு

இயல்பு மீறிய தனித்திறன்கள் அகங்காரமாக பரிணமிக்க, லேசான பவுடர் பூச்சு 
இயல்புக்கு மீறி துருத்தலாய்...

தேவதைகள் சாத்தான் வேசம் கொண்டதால், சாத்தான் அரிதாரத்திலே இறப்பு எய்துகிரோம்.

ஒப்பனை உண்மையை மறைக்காது, 
ஒளிந்து கொள்ளும்.
ஒரு நாள் ஒப்பனை, 
பண்பாட்டு ஒவ்வாமையால் சிதையும். 

நம்மை வருடும் ஆறுதல் சூனியக்காரியின் விரல்களே.. சூனியக்காரியின் கைப்பக்குவம் நம்மை தாலாட்டி சீராட்டி வளர்க்கும்.

இப்போது இயல்பான மனிதர்கள் சாத்தான் வேசஷங்களில்... 
துர்பாக்கிய கடவுள்களுக்கு முன்னாள்... 
சாத்தான்கள் மனிதனாக வேண்டி முடி காணிக்கையை பிச்சையிட்டார்கள்.
கடவுள் வேண்டுதலுக்காக சாத்தான்களை பார்த்து அலங்கரித்துக் கொள்கிறது.

சாத்தான்கள் தங்களை பெயர் மாற்றிக் கொண்டு மனித வடிவில்...
ஏனெனில் சன்னதிக்குள் பிரவேசிக்கும் மனிதன், வெளியேறும்போது சாத்தானாக பரிணமிக்கின்றது. 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பேரழிவின் வாருங்காலம்

அம்பேத்கர் ஆக்கங்கள் மக்கள் பதிப்பு அறிமுகம்

அன்னவாசல் தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்ற மகளிர் தின மரநடும் விழா மற்றும் கவிஞர் செங்கை தீபிகாவின் பறக்க தயங்கும் பட்டாம்பூச்சி நூல் வெளியீடு...