முழுமை பெறாத
நடுப்பக்க கவிதை,
சுண்டல் காரனின் மிக லாவகமாக...
கவிதை தாளை அதிகமாகவும் சுண்டலை குறைவாகவும் கட்டும் ராஜதந்திரி
சுரண்டலை புரிந்துகொண்டு, சமாதானம் அடைந்து,
சுண்டி இழுத்த சுண்டலின் மனம்...
அவதானிக்கப்பட்ட ஊழலையும் பொருட்படுத்தாது வாங்கினேன்.
ஒரே ஆறுதல் ஈரம் படிந்த ஒரு கசங்கிய காகிதத்தில் யாரும் படித்து விடாத கவிதை தென்பட்டது.
நான் எழுத தவறிவிட்ட பொறாமை கொண்ட கவிதை..
அலமாரியில் நேர்த்தியாய் அடுக்கப்பட்ட வார்த்தைகள்...
பொருள் விளங்கா உருண்டை போல் அதன் சுவையும் இருந்தது.
வாழ்க்கை அனுபவம் அர்த்தங்களாய்...
சற்று நேரத்தில் கானல் நீராய் கரைந்துவிடும் தானே?
வெண்சுருட்டு ஓட்டை வழியே அதன் அர்த்தத்தைத் தேடிக் கொண்டிருந்தேன்.
மூத்திர சந்தின் வாடை மட்டும் தூக்கலாக...
ஒரு சாம்பிராணி பாயின் கடந்து போகும் வாடையை கவிதையாக கோர்த்து அழகு பார்த்தேன்.
ஆனந்தமான வெயிலில் காயும் மரத்திற்கு அடியில்,
சலவை செய்யும் மூதாட்டியின் கல்லாவில் நிறைய நோட்டுகள்... சாப்பிட மறந்து பசியில் துணிகளைத் தேய்த்தாள்,
நானோ வெறும் கையில் முழம் போட்டுக் கொண்டிருந்தேன்
அவ்வளவுதான் சார் வறுமை.
வார்த்தைகளின் வறுமை அர்த்தங்களில் தோல்வியுறுகிறது.
அர்த்தங்களோ வாசகனின் புரிதலில் மறைந்து போகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக