ஜெ.ஜெ. கல்லூரி & தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் - சிறுகதை பயிலரங்கம்
தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்றம் மற்றும் ஜேஜே கலை அறிவியல் கல்லூரி தன்னாட்சி புதுக்கோட்டை தமிழ்த்துறை இணைந்து மாணவர்களுக்கு இரண்டு நாள் சிறுகதை பயிலரங்கு. 14.15 ஜூலை 2025 கல்லூரி வளாகத்தில் மூன்று ஆண்டுகள் புரிந்துணர்வு ஒப்பந்தத்துடன் துவங்கியது. துணைத் தலைவர் ஐயா தயாநிதி மற்றும் எழுத்தாளர் முனைவர் துவாரகா சாமிநாதன் இருவரின் சீரிய முயற்சியில் இந்நிகழ்வு சாத்தியப்பட்டது. தமிழ் தறை சார்ந்த 50க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் இந்நிகழ்வில் பங்கு பெற்றனர். கல்லூரி முதல்வர் அவர்களின் துவக்க உரையுடன் ஐந்து அமர்வுகள் சிறுகதை குறித்த அழகியல் இன அறிவியல் கூறுகள் என பல்வேறு பொருன்மைகளில் முனைவர் காமராசு துவங்கி வைத்து, கவிஞர் கண்மணி ராசா சிறுகதை பேசுபொருள் குறித்தும், அண்டனூர் சுரா அவர்களின் வட்டார எழுத்தாளர்களின் கதையாடலும் சிறுகதையின் பெண்கள் குறித்து முனைவர் அகிலா கிருஷ்ணமூர்த்தி அவர்களும் அழகிகளும் இன வரைவியிலும் என்கின்ற பொறுமை குறித்து கவிஞர் கலியமூர்த்தி அவர்களும் நுட்பமான உரையால் மாணவர்களை பேராசிரியர்களை ஈர்ப்புடன் ஒருங்கிணைத்தனர். நிறைவுறையாக மாநில பொதுச் செயலாளர் கல்லூரி நிர்வாகமும் கலை இலக்கிய பெருமன்ற இணைந்து ஏற்படுத்திய புரிந்துணர்வு ஒப்பந்தத்தை மாணவர்கள் மத்தியில் ஏற்படுத்தி அதை வெளியிட்டு, வாழ்த்துரை வழங்கி பங்கு பெற்றவர்களுக்கு கல்லூரி முதல்வர் மாணவர்களுக்கு பங்கேற்பு சான்றிதழ் வழங்கினர்.
மன நிறைவான புதுமுக மாணவர்களிடம் வாசிப்பு பழக்கத்தை ஊக்குவிக்கவும், படைப்புகளை அறிமுகப்படுத்தவும் அதன் வழி படைப்பாளியாக்க முன்னெடுப்பும் தூவக்க நிலையை ஏற்படுத்தியதில் மனம் நிறைந்த பெருமித நிகழ்வு. தங்களுக்குள்ளே சுருங்கி போகும் இலக்கிய நிகழ்வுகளை தாண்டி புதுமுக இளம் படைப்பாளிகளை உருவாக்கும் நோக்குடன் எடுத்த முன்னெடுப்பு வெற்றிகரமாக அமைந்தது. தமிழ் துறை துறை பேராசிரியர்களின் மாணவர்களின் மீதான அக்கறை மதிப்புக்குரியது. பேராசிரியர்களின் ஐந்து அமர்வுகளில் அவர்களின் வாசிப்பு வழிவந்த தொகுப்புரை பாராட்டுக்குரியது.
மதிய உணவு தேநீர் என கல்லூரி நிர்வாகம் ஏற்பாடு சிறப்பு. குளிரூட்டப்பட்ட அறையில் நடந்த இந்நிகழ்வு மாணவர்களை கவனம் சிதறாமல் ஒருமுகப்படுத்தியது. பயிற்சி பெற்றவர்களும் பயிற்சியாளர்களும் மாணவர்களை புரிந்து கொண்டு, நேர மேலாண்மை தலைப்பு மீதான எளிய பொருண்மையில் விளக்கமும் சிறப்பு. இந்நிகழ்வில் பங்கெடுத்த மருத்துவர் ஐயா புகைப்படங்களும் சிறப்பு. அனேகமாக அடுத்த முறை அதே கல்லூரியில் விடுமுறை நாட்களில் பிற கல்லூரி மாணவர்களும் பங்குபெறும் நாடகப் பயிலரங்கு நடத்த சாத்தியப்படும் என நினைக்கிறோம்.
ஒத்துழைத்த கல்லூரி நிர்வாகம் தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்ற நிர்வாகிகள் அனைவருக்கும் அன்பும் நன்றியும்.
கருத்துகள்