2 செப்., 2022

பின்னிரவு முழிப்பு

நீண்ட கவிதை என்பது உணவை உட்கொள்ளும் லாவகத்தை ஒத்ததே...

கையால் ஊட்ட 
அசைபோட 
விழுங்க
இடைவெளி இயந்திரதனத்தின் ஊடே கவிதை கரு பரிணமிக்கும

பின்னிரவு விழிப்புகள் வழிபோக்கனின் அதிர்ஷ்டத்தை போல் கொட்டிக்கிடக்கும் வார்தைகள் அழகுற அடுக்கி இறுமாப்பு சூடாலாம்.

விடிந்ததும் என்னைப் போல் ஒருவனால் ஏளனமாக கடந்தும் போகலாம்.

ஆனாலும் விலைபோகாத உழைப்பு பலநேரங்களில் கழிவிரக்க ஆறுதலே...

முயற்சிக்கும் போது முடியாமல் போக 
ஏதோ ஒரு பின்னிரவில் 
கவிதைகள் பேயாய் இறங்கிவிடுகிறது.

வேறு வேறாக தோன்றினும் ஒரே மாதிரியாக...

இடத்திற்கு ஊட்டப்படும் வாய்க்கரிசி போல் கவிதைகள் படிக்கப்படாமலே மரணித்து விடுகிறது.

கருத்துகள் இல்லை: