என் கருப்பு முடிகள் வெள்ளையாகிறது
ஆனால்
வெள்ளை முடிகள் கருப்பு அடிக்கத்தான் முடியும்
விறுவிறுப்பான இந்த சருமங்கள் இப்போது சுருக்கமாக
என் செலவுகளை போல்
அதுவும் சுருங்கி போய்விட்டது
எல்லோரும் கை குலுக்கிவிட்டு திரும்பிப் பார்க்கையில்
பலரும் என்னை விட்டு நெடுந் தூரத்தில் மறைந்து இருந்தார்கள்
இளமை நாழிகைகள் எதிர்பார்ப்பற்ற அன்பால் நிரம்பி வழிந்தது
ஆனால்
முதுமை நாழிகைகள் எதிர்பார்ப்போடு தன்னை புதைத்து கொள்கிறது
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக