மனிதர்கள் கடிகாரம் என பெயரிட்டார்கள்
அது எப்போதும் ஒரே வேலை செய்கிறது
ஆனால்
இந்த மனிதர்கள் சில நேரம் பதட்டமடைகிறார்கள்,
சில நேரம் நகர்ந்து விடாதா என எண்ணுகிறார்கள்
வட்டியும் வாடகைக்கு மொத்த உழைப்பை அர்ப்பணிப்பு செய்கிறது கடிகாரம்
ஆழ்ந்த அழகிய உறக்கத்தை அதிர்ச்சியடைய செய்கிறது இந்த அலாரம். மனித உழைப்புகள் இயல்பை தொந்தரவு செய்பவையாகவே...
வேகமாக நகரும் நொடி முள்ளுக்கு மதிப்பில்லை மெதுவாக நகரும் மணிக்கு மதிப்பு
வரிசையில் காத்திருக்கும் வேகமாகவும்
பின்னாடி நிற்பவருக்கு மெதுவாகவும் நகர்கிறது
மாய பிம்பம் எப்படி இருவருக்கும் வேறு வேறாக இருந்தது?
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக