முதுமையின் மீது மழை

முதுமையின் மீது மழை பெய்து கொண்டிருந்தது.
உழைப்பை திருடி இளமை குடைபிடித்து நடந்தது.
மழைக்காக ஒதுங்கிய காத்திருப்பு, சொற்களை அடுக்கி கவிதையாக்கி கொண்டிருந்தது.
மழை நேரத்தில் யாரும் சோகத்தை யாசிக்கவில்லை. எல்லோர் மீதும் மழை சிலிர்ப்பை ஆரத்தழுவி சென்றது.
ஒன்டிப்புலி தனிமை ஒரு பறவையின் குரலை, இசையை தொகுத்து தனக்குள் புளங்காகிதம் அடைகிறது.
மலை நேரத்து சாலையில் அனைவரும் வாகன ஒலிகளுக்கு ஒருங்கிணைந்து கடந்து போகும்போது 
ஒரு பறவையின் குரல் வெறுமையை, இசையால் வடிவமைக்கிறது.
கற்பனைகள் பலநேரம் தன்னை காமக் கொடூரனாக, ரத்தத்தை சிதரடிப்பவனாக, வெகுளி என வடிவமைக்கிறது. 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பேரழிவின் வாருங்காலம்

அம்பேத்கர் ஆக்கங்கள் மக்கள் பதிப்பு அறிமுகம்

அன்னவாசல் தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்ற மகளிர் தின மரநடும் விழா மற்றும் கவிஞர் செங்கை தீபிகாவின் பறக்க தயங்கும் பட்டாம்பூச்சி நூல் வெளியீடு...