5 செப்., 2022

ஓடுகாலி பறவையின் நிதானம்...

பறவைகளின் அதிகாரம் அதன் சிறகுகள் தான்... சிறகுகள் சிதைந்த பறவையின் நிலையை ஓடுகாளி மானிடம் பெயர் சூட்டியது...
அதிகாரத்தை இழந்ததன் விளைவு தினமும் செத்துப் பிழைக்கும் வாழ்க்கை...
சக மாற்று உயிரினங்கள் எப்போதும் என்னை குறிவைத்து தாக்க தயாராகிறது. 
பயமே எனது 90% வாழ்க்கையாய்...
எனது அனுபவங்கள் ஏதேனும் ஒரு பறவைக்கு கடைத்திருப்பேன் ஆனால், இனம் நெருக்கடி தருணத்தில் தன்னை தகவமைக்கும் மரபாய் மாறி இருக்கும் வாய்ப்பு கிட்டிடவில்லை. 
உதிர்ந்த பிறகு வளர்ந்து விடும் என நினைத்த இறகுகள் குறை பிரசவத்தால் ஓடுகாளி பறவையானே
வானத்தைப் பார்க்கும் நான் பூமியை பார்க்க முடியவில்லை சகோ கூட்டாளிகளான எந்த பறவையும் என்னை ஏளனம் செய்யவோ, இறக்கப்படவோ இல்லை. 
நான் யாருக்கும் உணவாகினாலும் அவர்களுக்கு பசியை போக்கிவிட முடியாது இருந்த போதும் கைவிடப்பட்டு கிழட்டு விலங்கினங்கள் என்னை சீண்டி தான் பார்க்கிறது.
பைத்தியக்காரன் இரவுகள் போலவே நானும் கடக்கிறேன். என்னால் உறுதியாக சொல்லிவிட முடியும் உலகில் பேய் பிசாசு எதுவும் இல்லை என்று ஏனெனில் என் இரவு விழித்திருப்பதிலேயே தூங்குகிறது.

கருத்துகள் இல்லை: