அருவம்

பழைய கவிதையின் நிழல் துக்கத்தில் இருந்த என்னை விழிக்கச் செய்து
ஆவியாய் கருப்பொருள் இங்கு அங்கும் அலைய
வார்த்தைகளின் அடுக்குகளில் லாவகம் மறைய அர்த்தம் மட்டும் பழைய பொருளுக்கு  விளக்கம் கேட்டது
இங்குதான் ஒரு பியூட்டி
அறிவாளிகள் குழம்ப ஒரு முட்டாள்தனம் எல்லோரையும் பார்த்து பல்லிலித்து பதிலளிக்க
அறிவாளிகள் நம்ப மறுக்க தூக்கம் கலைந்தது
பழைய கவிதை ஒன்று தூக்கத்தை கெடுக்கும் என்றால் என் விழிப்பு நிலை நம்ப மறுத்து ஏளனம் செய்கிறது
இருந்து விட்டுப் போகட்டும் என்றால் அடுத்த நாள் பின்னிரவில் இதே தர்க்கம்
எழுதப்படாத அசைபோடும் கவிதைகள் இப்படிதான் தூக்கம் முடியும் தறுவாயில் விடாப்பிடியாக எழுப்பி கேளி செய்கிறது
யாருக்கு தெரியாத இதுபோல் சம்பவங்கள் கௌரவத்தை சிதைக்காமல் தற்குறி சால்சாப்பு போதிக்கும்
பாவத்தின் வருமானம் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு பிச்சைக்காரனாக அலைகிறேன். ஆனால் கத்தையாக நோட்டுகள் பைகளில் விழிப்பு நிலையில்
பின்னிரவு புலம்பல் அறுந்து போன காத்தாடியாக மறைந்துவிடும் எங்கோ முள் மீது சிக்குண்டு போது கவனத்தில் தட்டுப்படும்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பேரழிவின் வாருங்காலம்

அம்பேத்கர் ஆக்கங்கள் மக்கள் பதிப்பு அறிமுகம்

அன்னவாசல் தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்ற மகளிர் தின மரநடும் விழா மற்றும் கவிஞர் செங்கை தீபிகாவின் பறக்க தயங்கும் பட்டாம்பூச்சி நூல் வெளியீடு...