5 செப்., 2022

நிதானம்

கவலையின் மீது குவிக்கப்பட்டும் ஒரு முகமே நிதானம்
என் முன்னோர்களின் ஆசைகளை ஒரு கூடை நிறைய என் மூளை சுமக்கிறது தீர்க்கமுடியாத தீர்ப்புகள் அதில் ஏராளம் வரிசை கட்டி நிற்கிறது
என் மொத்த ஆயுசும் போதாது அவைகளை இறக்கி வைப்பதற்கு
ஓசியில் கற்சிலைகளை நோக்கி யாசிக்கிறேன். 
என் முன்னோர்களின் சாபம் போலவே எனக்கும் தொடர்கிறது
தந்திரத்தால் மந்திரம் செய்து சொற்ப உழைப்பையும் சூறையாடும் சூனிய மந்திரக்காரன்
மந்திர சூனியக்காரர்கள் பெருகி அவர்கள் மூளை முழுவதும் அகோரமாய் அந்நியனின் பாக்கெட்டை கொள்ளையடிக்கிறார்கள்
எந்த இபிகோ வும் தண்டனை வழங்காது நமுட்டு சிரிப்புடன் நக்கரிக்கிறது.
எங்கிருந்தோ அழகான இறக்கை உடைய பெயர் தெரியாத பறவை ஒரு பாடல் பாடி அமர்கிறது
இப்போது என் மூளை சுமைகள் எனக்கு தெரியவில்லை

கருத்துகள் இல்லை: