யாரேனும் பார்த்து விடக்கூடாது என்ற பதட்டத்தில், பேனா தவறுகிறது.
வெற்றுத் தாள்கள் கருப்பு மையின் ஒரு புள்ளிக்காக சலசலத்து போராடுகிறது.
தக்கையின் மீது தடுமாறி அலைக்கழியும் கவனம் எனும் எறும்பு ஏறிவிட,
கவிதை கரு எனும் கௌரவப் பேனா கை நழுவிப் போகிறது. மனிதாபிமான துடுப்பை தேடுகிறேன்.
மூடுபனி விலக பார்த்தேன், என்னைப்போல் பலரும் மனிதாபிமானத்துடன் பேனா கொண்டு சண்டை போட்டுக் கொண்டிருந்தார்கள்.
நண்பர்களே கவிதைக்கு பேனா, மனிதாபிமானத்திற்கு துடுப்பு என்றேன்.
போடா துக்கடா என்று கடந்து போனார்கள்.
மொழியின் எழுத்து லாவகம் கவிதையாக அகங்காரம் கொள்கிறது.
மனிதாபிமான துடுப்பு கழிவிரக்கத்தை அலங்கோலமாக தன்னை ஜோடித்து கொள்கிறது.
என்னின் மனிதாபிமானம், கவிதையை சுரண்டி தின்கிறது.
இது எனக்கு மட்டும்தானா ?
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக