நெடும் தூக்கம் இளமையின் லாவகம்
பழுத்த ஒருவனின் தூக்கத்தை, குட்டித் தூக்கங்கள் திருடி கொண்டன.
குட்டித் தூக்கங்கள் எப்போதும் தனக்குள் ஒரு கதையை பின்னிப்பிணைந்து கொள்கிறது.
குட்டித் தூக்கங்கள் சிறந்த கதை சொல்லிகள்,
திகில் கதை முதல் கழிவிரக்க கதை வரை காணக் கிடைக்கும்.
கண் திறந்தால் மறைந்து போகும்.
ஆனால் பழிவாங்குதலே கனவுகளின் அறக்கோட்பாடு.
அநேக குட்டித்தூக்கம் மனிதர்களின் அன்றாட நிகழ்வின் அவஸ்தை கோட்பாடாய்.
இப்படித்தான் ஒரு குட்டித் தூக்கத்தின் இடையில்...
யாருமற்ற வீதியில் நடந்து போக, கண்விழித்தால் ஜன நெருக்கடி மிகுந்த சந்தை...
ஒரு சந்தேகம் ?
மாபெரும் கூட்டத்துக்குள் என் கனவு மட்டும் என்னை தனியாக கடத்துவது ஏன் ?
புரிந்த புதிர்தான், புரியாதது போல் நகர்ந்து விடுகிறேன்.
கடவுளின் இருப்பை போலவே அறிந்து கொள்ளாமலே பயந்துகொண்டு வாழ்க்கையை நகர்த்துகிறேன்.
ஆனால் ஒரு போதும் ரத்த வாடையும், நெடியும் அங்கு இருப்பதே இல்லை ?
கனவுகளுக்கு பிறகு விழித்தால் வியர்வையும் படபடப்பும் ?
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக