சோர்வான எனது உணர்வில் பழுத்த இதய வடிவ இலை தாலாட்டாக என் மீது அமர்ந்தது...
உற்சாகம் கரைபுரண்டோட கவனம் மாற்றப்பட்ட கவிதை என் மீது லேசாக வருடியது
காற்றும் பல சருகுகளை உதிர்த்தது
கற்பனை கதவு இடுக்கின் வழியே எட்டி பார்க்க,
வார்த்தைகளைத் தேடி கோர்த்து ஒரு பூமாலை கட்டி விட்டேன். வாசனையற்ற பூக்களால் தொடுத்திருந்தேன்.
யாரும் சீண்டி பாக்காத ஏக்கத்துடன் தொங்கிக்கொண்டிருந்தது
கவிஞர் என்ற அகங்காரம் இல்லாததால் எல்லோரிடமும் காட்ட கூச்சப்பட்டு மறைதிருந்தேன்.
எனக்குப் பின் தோன்றிய சில அரைவேக்காடுகள் தங்களை அரங்கேற்றிக் கொண்டு அகங்காரத்தை கொண்டாடிக் கொண்டு..
நானோ யாரும் படிக்கவில்லை என அகங்காரத்தை கூட்டிக் கொண்டு இருந்தேன்
ஒரு கவிதையின் பிறப்பு எனக்குள் அகங்காரத்தை வளர்ந்திருந்தது
ஒரு கவிதை கருவை எல்லோரிடம் கொண்டு சேர்த்து இருக்க வேண்டும், ஆனால் எனக்குள் அகங்காரத்தை சூழ் கொள்ள செய்தது
இதய வடிவ இலை சருகு எப்போதும் உதிர்ந்து கொண்டே இருக்கிறது. என் கழிவிரக்கம் கவிதை மனம்
அலங்காரம் இட்டு அரியணையில் ஏற்ற நினைக்கிறது.
யாரேனும் கைத்தட்டி விட்டுப் போங்கள் பிழைத்து போகிறேன்.
கவிதைகள் நஞ்சையும் நரகளையோ யாசிப்பதில்லை.
தேவதையின் நுனிநாக்கு நடனமாடும் கவிதைகள் எனக்கு ஏனோ கைவரப் பெறவில்லை.
எண்ணின் கவிதைகள் கூ முட்டைகளை அடை காய்க்கிறது குஞ்சு என்று தெரிந்தே
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக