5 செப்., 2022

நிதானத்தின் பொருட்டு

பரபரப்பாக எல்லோரும் பணிக்கு சென்ற பிறகு 
யாரும்மற்ற வேலையில் பொழுதைப் போக்க தெரியாத ஒரு தற்குறி கலைஞனின் பகல் நேர கனவு யாருமற்ற டீக்கடை பெஞ்சில் முடிவுறலாம்
பெஞ்சில் சிந்திய டி யில் ஒரு அழகிய கவிதையை கற்பனையோடு வரைந்து கொண்டிருந்தேன் கவிதை ஒன்று கூட பிறந்து விட்டது அதற்குள்ளாக ஒரு குடும்பஸ்தனி அழுக்குத் துணி அதை அழித்தது. 
சாலைகளின் வாகன இரைச்சல்கள் வெட்டி பொழுதை அழகான இசையால் வடிவமைக்கிறது
பொறுப்பற்றவன் புலம்பல் ஒரு பிடி சோற்றில் முடிவடையலாம்
வெட்டிப் பொழுதுகள் வரட்டுதனங்களால் இலைகளற்ற ஆலமரமாக விருச்சம் அடைகிறது. ஏனோ அதீத கற்பனை கனவுகள் எதார்த்தத்தை நினைக்க மறந்து விடுகிறது.
இவன் கண்ணின் கண்ணாடி முதிர் கனிகளை கூட குமரிகளாக வடிவமைக்கிறது.
குறிக்கோளற்ற குறிப்புகளின் ஏடு பெற்றுத்தாள்களை சலசலக்கிறது.
கண்ணாடி முன் நின்று துல்லியமாக எண்ணி விட முடிகிறது வெள்ளை முடிகளை கணக்கில் புலி 
கனவுகளில் எலி
இயல்பில் கிலி

கருத்துகள் இல்லை: