13 அக்., 2022

ஒவ்வாமைச் சூழல்

எதிர் வினையை சிதைப்பாதாக நினைத்து 
நாளையை... 
தவறான முன்மாதிரிகள் கொண்டு நிரப்புகிறார்கள்.
அறிவை அளவிடத் தெரியாத அறியாமையிடம் இருந்து, விலகிவிடும் என் சுயம். 
தோல்விக்கு ஆறுதல் தேவை இங்கு 
ஆனால், 
குத்தி காட்டும் குரோதம் நிரம்பிய உள்ளறை விரோதம்
கோட்பாடுகளின் பயணம் வளைந்து நெளிந்தே செல்லும், 
பயணிப்பவர்கள் மேலும் கீழுமாக ஓடவோ, நடக்கவோ, ஊர்ந்தோ, செல்கிறார்கள்.
கோட்பாட்டு பயணத்தில் எங்கே வந்தது வஞ்சம், சூழ்ச்சி, பொறாமை, பழிதீர்க்கும் எண்ணம்... 
ஆக கொடூரம்...
இலகுவாக பயணிக்க வெளியே 
நமக்கான எதார்த்தம் காத்திருக்கு...

கருத்துகள் இல்லை: