இலைகள்
இன்னொரு இலையின் இடத்தை
ஆக்கிரமிக்கவில்லை.
கிளைகளும் பூக்களும் அப்படியே...
பூமிப்பந்தில்
மொத்த மரங்களும் அப்படியே
தன்னை பகிர்ந்து பரப்பிக் கொள்கிறது
இலைகள் உதிர்வதற்காகவோ
பூக்கள் உதிர்வதற்காகவோ
காய்கள் பறிப்பதற்காகவும்
கனிகள் திருடுவதற்காகவும்
மரங்கள் வஞ்சம் கொள்ளாது.
பூச்சி புழுக்களும் கொலை செய்வதில்லை
வேட்டையாடுகிறது.
ஏன்
நான் அன்பே பகிர்ந்து அளிப்பதில்லை
வஞ்சம் சூழ்ச்சி பொறாமை
பழிவாங்கு உணர்ச்சி என
ஏகத்துக்கும் எதிர்மறையாக வளர்கிறேன்.
ஓட்டுவார் ஒட்டி
எல்லோருக்கும் பரப்பி
சண்டையிட்டு மாண்டு போகிறேன்
என் குழந்தைகளுக்கும்
அவை என்னால் விஷ விதையை
விதைக்கப்படுகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக