21 அக்., 2022

தற்குறி

தனிமையின் அவலட்சணம்
குறுக்கு சந்தின் வழியே  
தனிமை ஒன்று தலைகுனிந்து நடந்து சென்றது
தனது பாக்கெட்டில் 
சரியான எண்ணிக்கையில் உணவுக்கான பணம்
தன் பணங்கள் சரியான விகிதத்தில் 
எண்ணி எண்ணி செலவு பயனை அடைகிறது

ஒரு பிரம்மச்சாரியின் செலவு குறிப்பு 
தன் சார்ந்தது பெரும்பகுதியாக இருக்கும்
அந்தப் பணங்கள் பொது புத்திக்கு 
செலவு செய்யப்படுவதே இல்லை. 
ஏனெனில் 
தற்குறி தனிமை பொதுபுத்தி நம்மை 
பலிவாங்கி விட்டதாகவே கரு கொள்கிறது
ஆனால் 
பாருங்க உணவு கடையில் 
சாம்பார் பாக்கெட் ஓசி வாங்கி விடும்
தற்குறிகளின் சிக்கனம் 
நாளடைவில் கரிமித்தனமாக மாறி 
பிசினாரித்தனமாக மரணம் அடைகிறது

ஒரு தற்கூறியின் இலக்கு 
இலக்கற்ற பயணமாகவே இருக்கிறது

தனிமையின் நண்பர்கள் 
சுயநலம் 
தற்குறி 
கொஞ்சம் சூது என 
நட்பை சுருக்கிக் கொள்ளுகிறது

பாதிக்கப்படும் நிகழ்வு ஒன்றிற்கு 
வார்த்தைகளையோ கண்ணீரையோ சிந்தும் 
இந்த தனிமை ஒருபோதும் கையில் இருந்து எதையும் தந்து விடாது

குப்பைகளை அடுக்கிக் கொண்டிருக்கும் 
தற்குறி தனிமை குப்பை என்றே உணராத பொக்கிஷங்கள்

தற்குறிகள் வார்த்தைகளை வீணடிப்பதில்லை 
ஆனால் அடைய முடியாத இலக்குகளை 
கற்பனை கோட்டையாக வடிவமைக்கிறது

எது குறித்தும் கவலைப்படாத இந்த தனிமை 
வயிற்றை நிரப்ப சுவையை மறந்து விடும்
தண்ணீர் நிரப்பப்படாத 
1000 பாட்டில் கையிருப்பில் இருந்த போதும் 
ஆயிரத்தி ஓராவது பாட்டில் தண்ணீருடன்...

தற்குரியின் சோம்பேறித்தனம் 
ஆடைகள் பல கிடைத்த போதும் 
துவைக்க வேண்டும் என்பதற்காக 
இரண்டு செட் மட்டும்...

தனிமை பெரிய 
இடங்களை அடைத்துக் கொள்வதில்லை 
சிறிய இடங்களில் சுக துக்கங்களை 
பரிமாறிக் கொள்கிறது

தனிமை எதிராளி இருக்க வேண்டியதில்லை 
பேசுவதற்கு பேசுபொருளும் 
தன் மன கண்ணுக்குள்ளேயே தர்க்கம்
பிறர் குறித்து கவலை இன்றி 
தன்குறித்து தற்குறி பரிணாம வளர்ச்சி அடையும் 
ஒரு பாதாளம்
எப்படி இருந்த போதும் 
தனிமை யாரையும் கண்ணீர் சிந்து விடுவதில்லை 
கொலை செய்வதில்லை 
அது ஒரு தற்கொலை அழகியல் நாடகம்.

கருத்துகள் இல்லை: