21 அக்., 2022

யாசிக்கிறேன்

குறிப்புகளற்ற வெளியில் 
வார்த்தை கொட்டி கிடக்கிறது. 

ஒரு குறிப்பைக் கொண்டு 
அதை அழகுற அடுக்கி புலங்காயிதம் அடைந்து 
அயர்ந்து பின் விழித்த போது 
அவை அர்த்தமற்றவையாக.
பொழிவிழந்து மங்கிப்போன குறிப்பாய் 
அங்குமிங்கும் அல்லாடி கொண்டிருந்தது.

தாயின் மன சிதைவு குழந்தையாக  
என் கவிதை கூடவே வாழ்ந்து வந்தது 
அந்த தாயை போல் 
கவிதையை தூக்கி சுமக்கிறேன். 
அடுத்தவரின் கவிதைகள் என்னை பார்த்து பரிதாபப்பட்டு 
இந்த குழந்தை கொன்று விடலாம் என்ற ரீதியில் புலம்ப

பரிதாபப்பட்டு கடந்து போகும் நீங்கள் 
என் கவிதையையும் சகித்தருள வேண்டும்.

கருத்துகள் இல்லை: